டிஜிட்டல் மார்க்கெட்டிங் மாணவர்களுக்கு புதிய படிப்பு...!!

டிஜிட்டல் மார்க்கெட்டிங் பிரிவில் பணியாற்றுபவர்களுக்காக புதிய படிப்பை பிரிட்டனிலுள்ள ஸ்டாபோர்டுஷையர் பல்கலைக்கழகம் அறிமுகம் செய்துள்ளது.
இந்தப் படிப்புக்கு எம்.எஸ்சி டிஜிட்டல் மார்க்கெட்டிங் நிர்வாகம் என பெயரிடப்பட்டுள்ளது. டிஜிட்டல்
மார்க்கெட்டிங் நிர்வாகத் துறையில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள், சவால்களை எதிர்கொள்ள மாணவர்களை தயார்படுத்துவதுதான் இந்த படிப்பின் நோக்கமாகும்.
இது ஓராண்டு படிப்பாகும். இந்தப் படிப்பில் சேர இளம் அறிவியல் பிரிவில் ஹானர்ஸ் படிப்பு படித்திருக்கவேண்டும். நல்ல ஆங்கிலப் புலமை இருக்கவேண்டும். இந்த படிப்பு செப்டம்பரில் தொடங்குகிறது. இந்தப் படிப்பில் சேர 12 ஆயிரம் பிரிட்டன் பவுண்டுகள் கட்டணமாக இருக்கும்.


இந்திய மாணவர்களுக்கு 2 ஆயிரம பவுண்டுகளுக்கான கல்வி உதவித் தொகை வழங்கப்படும்.
விண்ணப்பங்களை ஜூன் 30-க்குள் ஸ்டாப்னுோர்டுஷையர் பல்கலைக்கழகத்துக்கு அனுப்பவேண்டும்.
மேலும் விவரங்களுக்கு www.staffs.ac.uk/ என்ற இணையதளத்தைக் காணலாம்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...