தமிழக அரசுத் துறைகளில் உள்ள, காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்' என, தமிழ்நாடு அரசு அலுவலர் கழகம் வலியுறுத்தியுள்ளது.
தமிழ்நாடு அரசு அலுவலர் கழக மாநிலத் தலைவர் சவுந்தரராஜன், தஞ்சாவூரில் நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழக அரசின் பல்வேறு துறைகளில், காலிப் பணியிடங்கள் ஏராளமாக
உள்ளன. இவற்றை உடனடியாக நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அங்கன்வாடி, சத்துணவு பணியிடங்களும் நிறைய காலியாக உள்ளன. அவற்றையும் உடனடியாக நிரப்ப வேண்டும்.
இறந்துபோன அரசு அலுவலர்களின் வாரிசுகளுக்கு, கருணை அடிப்படையில் வழங்கப்படும் பணி நியமனம், கால தாமதப்படுத்தாமல் உடனடியாக வழங்கப்பட வேண்டும். கால தாமதம் செய்வதால் அக்குடும்பங்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகின்றன.
தஞ்சாவூர் சரஸ்வதி மகால் நுாலகத்தில், காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.