வேலை நிறுத்தத்திற்கு கட்சிதலைவர்களிடம் ஆதரவு கேட்பு : கண்ணையா பேட்டி...!

குறைந்தபட்ச ஊதியம் உட்பட 36 அம்சகோரிக்கைகளை வலியுறுத்தி, ஜூலை 11 முதல் நடக்கும் காலவரையற்ற வேலைநிறுத்தத்திற்கு ஆதரவு கேட்டு மாநில முதல்வர்கள், கட்சி தலைவர்களை சந்திக்க உள்ளதாக தெற்கு ரயில்வே மஸ்துார் யூனியன்(எஸ்.ஆர்.எம்.யு.) பொதுச்செயலாளர் கண்ணையா தெரிவித்தார்.

மதுரையில் நேற்று அவர் கூறியதாவது: ஏழாவது சம்பள கமிஷனில் நாங்கள் கேட்ட அடிப்படை சம்பளத்தை வழங்ககோரியும், தனியார்மயம் ஆக்குவதை எதிர்த்தும் மார்ச் முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் தொடர இருந்தோம். ஐந்து மாநில தேர்தல் காரணமாக மூன்று மாதங்கள் தள்ளி போட்டோம். மத்திய அரசு தரப்பில் 6 முறை பேச்சுவார்த்தை நடந்தும் எந்த
முன்னேற்றமும் இல்லை.ரயில் பெட்டிகளை நாமே உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்கிறோம். அப்படி இருக்கும்போது கூடுதல் விலை கொடுத்து, தனியார்மயத்தை ஊக்குவிக்கும் வகையில் வெளிநாடுகளில் இருந்து வாங்க வேண்டிய அவசியமில்லை.
பொதுமக்களுக்காகவும், ரயில்வே ஊழியர்களின் அடிப்படை உரிமைகளுக்காகவும் இந்த போராட்டம் நடக்கிறது. மத்திய அரசுதான் இதற்கு காரணம். உ.பி., பீகார், மேற்கு வங்காளம், டில்லி மாநில அரசுகள் எங்களுக்கு ஆதரவு அளித்துள்ளன. அதேபோல், தமிழக அரசும் ஆதரவு அளிக்க வேண்டும். ஆதரவு கேட்டு தென்மாநில முதல்வர்கள், கட்சி தலைவர்களை சந்திக்க உள்ளோம். இவ்வாறு கூறினார்.
உதவி பொதுச்செயலாளர் வீரசேகர், கோட்ட செயலாளர் ரபீக், உதவி செயலாளர் ராம்குமார் உடனிருந்தனர்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...