திருவண்ணாமலை அருகே, பள்ளியில் இடைநின்ற மாணவியை மீண்டும் சேர்க்க தலைமை ஆசிரியை மறுத்ததால், அந்த மாணவி திடீரென போராட்டத்தில் ஈடுபட்டார்.
திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அருகே, ராதாபுரம் கிராமத்தை சேர்ந்த தொழிலாளி
ஒருவரின் மகள் ஷபனா, 17. இவர், கடந்தாண்டு, தண்டராம்பட்டு அரசு மகளிர் மேநிலைப் பள்ளியில், அறிவியல் பாடப்பிரிவில், பிளஸ் 2 படித்து வந்தார். இந்நிலையில், ஷபனாவிற்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதால் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு மருத்துவ சிகிச்சைக்கு சென்றார். அதனால், அரசு பொதுத் தேர்வை எழுத முடியவில்லை.
தற்போது, உடல்நிலை தேறியவுடன் மீண்டும் பிளஸ் 2 வகுப்பில் சேர்ந்து படிப்பை தொடர முடிவு செய்தார். இதற்காக, பள்ளி தலைமை ஆசிரியை மாதவியிடம் சென்று கூறினார். அதற்கு அவர், 'டிசி' பெற்று சென்று தனித்தேர்வு மூலம் தேர்வெழுதிக் கொள்' என, கூறியுள்ளார். அதனால், ஆத்திரமடைந்த மாணவி, நேற்று தன்னுடைய தாய் ைஹருன்பீயுடன், பள்ளி முன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.
தகவலறிந்த ராதாபுரம் பஞ்சாயத்து தலைவர் ரத்னவேலு, பள்ளிக்கு சென்று தலைமை ஆசிரியையிடம், மாணவியை பள்ளியில் சேர்க்க வலியுறுத்தினார். இதைத் தொடர்ந்து, பள்ளியில் மாணவி சேர்ந்து படிக்க அனுமதித்தார். இதுகுறித்து, பள்ளி தலைமை ஆசிரியை மாதவியிடம் கேட்ட போது, ''உயர் அதிகாரிகளின் ஆலோசனைப்படி, மாணவி பள்ளியில் சேர்ந்து படிக்க நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.