தமிழக அரசின் சுற்றுச்சூழல் விருது விண்ணப்பங்கள் வரவேற்பு.

தமிழக அரசின், 2015ம் ஆண்டிற்கான, சுற்றுச்சூழல் விருதுகள் பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.தமிழகத்தில், சுற்றுச்சூழல் கல்வி மற்றும் விழிப்புணர்வு; சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் மேலாண்மை உள்ளிட்ட ஆராய்ச்சி பணிகளில், சிறப்பாக
பணியாற்றி வரும் கல்வி நிறுவனங்கள், தனிநபர், தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு, 2015ம் ஆண்டின், சுற்றுச்சூழல் விருதுகள் வழங்கி கவுரவிக்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
சுற்றுச்சூழல் கல்வி மற்றும் விழிப்புணர்வு விருது, கல்வி நிறுவனங்கள், கல்வியாளர்கள், தனிநபருக்கு வழங்கப்படும்; சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் மேலாண்மை விருது, தனிநபர் மற்றும் நிறுவனங்களுக்கு வழங்கப்படும். விண்ணப்பதாரர் தனிநபராக இருந்தால், 18 வயது நிரம்பியிருக்க வேண்டும். ஏற்கனவே விருது பெற்றவர்கள், மீண்டும் விண்ணப்பிக்க முடியாது.
சிறந்த சுற்றுச்சூழல் ஆராய்ச்சி கட்டுரைகளை ஊக்குவிக்க, 2015 ஜனவரி முதல் டிசம்பர் வரை வெளியான, தனிநபர் அல்லது ஒன்றுக்கு மேற்பட்டோர் இணைந்து உருவாக்கிய, சிறந்த ஆராய்ச்சி கட்டுரைக்கு, ரொக்கப் பரிசு மற்றும் பாராட்டு மடல் வழங்கப்படும்.
இதற்கான விண்ணப்பங்களை, சென்னை, சைதாப்பேட்டை, பனகல் மாளிகை தரைதளத்தில் உள்ள, சுற்றுச்சூழல் துறை இயக்குனர் அலுவலகத்தில், ஜூன் 20ம் தேதி முதல், ஜூலை 18ம் தேதி வரை, பணி நாட்களில், அலுவலக நேரத்தில் பெற்றுக் கொள்ளலாம். துறை இணையதளத்தில் www.environment.tn.nic.inல் இருந்தும், விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து
கொள்ளலாம்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...