நிகழாண்டு பொறியியல் சேர்க்கை: நாளை மறுநாள் வெளியிடப்படடும்.

2016-17 கல்வியாண்டு பொறியியல் சேர்க்கைக்கான ஒற்றைச் சாளர கலந்தாய்வு ஜூன் 24-ஆம் தேதி தொடங்குகிறது.
இதற்கு விண்ணப்பித்தவர்களுக்கான ரேண்டம் எண் வரும் திங்கள்கிழமை (ஜூன் 20) வெளியிடப்பட உள்ளது. ஜூன் 22-இல் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.

நிகழாண்டு பொறியியல் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகத்தை ஏப்ரல் 15-ஆம் தேதி அண்ணா பல்கலைக்கழகம் தொடங்கியது. விண்ணப்ப விநியகம் இன்றி, முழுவதும் இணையவழி (ஆன்-லைன்) பதிவு முறையை அண்ணா பல்கலைக்கழகம் இம்முறை அறிமுகம் செய்தது.
கலந்தாய்வுக்கான அழைப்புக் கடிதங்கள் தபால் மூலம் அனுப்பப்பட மாட்டாது. விண்ணப்பதாரர்கள் பல்கலைக்கழக இணையதளத்திலிருந்து அழைப்புக் கடிதங்களை பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும்.


பெயர், பிறந்த தேதி, பொறியியல் சேர்க்கை பதிவு எண் ஆகியவற்றை ஆன்-லைனில் பதிவு செய்து அழைப்புக் கடிதத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...