எம்.பி.பி.எஸ்., தர வரிசையில் தமிழகம் பின்னடைவு !

எம்.பி.பி.எஸ்., தர வரிசையில், முதலிடம் மற்றும் மூன்றாம் இடம் பெற்ற இருவரும், முறையே கேரளா, ஆந்திராவில், பிளஸ் 2 படித்துள்ளனர்.
இவர்கள் எப்படி, தமிழகத்தில் விண்ணப்பிக்க முடியும் என்ற, கேள்வி எழுகிறது.இதுகுறித்து, மாணவர் சேர்க்கை செயலர் செல்வராஜ்
கூறியதாவது:விண்ணப்பிக்க, 18 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும்;தமிழகத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்.

பிற மாநிலங்களில் படித்தோராக இருந்தாலும், தமிழகத்தை இருப்பிடமாகக் கொண்டிருந்தால், விண்ணப்பிக்க முடியும். அந்த வகையில், வெளிமாநில பள்ளிகளில் படித்த,தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் விண்ணப்பித்து, தர வரிசையில் இடம் பெற்றுள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...