தமிழகத்தில், மீண்டும் வெப்பம் அதிகரிக்க துவங்கி உள்ளது. அதிகபட்சமாக, மதுரையில், 40 டிகிரி, 'செல்சியஸ்' பதிவாகி உள்ளது. சென்னை, திருச்சி, நாகப்பட்டினம் நகரங்களில், 38 - 39 டிகிரி செல்சியஸ் வெப்பம் நிலவுகிறது. 'ஜூன் முழுவதும் இந்த வெப்ப அளவே நீடிக்கும்' என, வானிலை ஆய்வாளர்
தெரிவித்துள்ளார்.
இது குறித்து, சென்னை வானிலை ஆய்வு மைய முன்னாள் இயக்குனர் ஒய்.ஏ.இ.ராஜ் கூறியதாவது:கேரளாவில், ஜூன் முதல் வாரத்தில் தென் மேற்கு பருவ மழை உருவாகி, வட திசையை நோக்கி நகரும். அந்த தாக்கத்தால், தமிழகத்தின், ஒரு சில இடங்களில் பெய்யும் மழையால், வெப்பம் சற்று தணியும். வட திசை நோக்கி பருவ மழை நகர்ந்ததும், மீண்டும் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும்.
இந்த சீதோஷ்ண நிலையே தற்போதும் நிலவுகிறது. தென் மேற்கு பருவ மழை கேரளாவில் உருவாகி, வட திசையை நோக்கி நகர்ந்த காரணத்தால், தமிழகத்தின், ஒரு சில இடங்களில், கடந்த
வாரம் மழை பெய்தது. தற்போது, தென் மேற்கு பருவ மழையின் தாக்கம் தமிழக பகுதியில் குறைந்து உள்ளதால், வெயிலின் தாக்கம் அதிகரித்து உள்ளது.
தென் மேற்கு பருவ மழையால், ஜூன் மாதத்தில் கிடைக்க வேண்டிய சராசரி மழை தற்போது பெய்து விட்டது. இப்பருவத்தில், ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் தான்
தமிழகத்துக்கு ஓரளவு மழை கிடைக்கும்; அதுவரை, இந்த வெப்பம் நீடிக்கும்.சென்னை, நாகை போன்ற கடலோர பகுதிகளில், கடல் காற்று தரையை நோக்கி வீசுவது குறைவாக உள்ளது. அதனாலும், வெப்பம் அதிகரித்து வருகிறது. சென்னையில், பிற்பகலில் வர வேண்டிய கடல் காற்று, மாலை நேரங்களில் தான் வருகிறது. நேற்று முன்தினம் மாலை, 6:30 மணிக்கு தான், கடல் காற்று
வந்தது. இரண்டு மணி நேரத்தில், இந்த காற்றின் வேகமும் குறைந்து விட்டது; வெப்பம் அதிகரிக்க இதுவும் காரணம்.இவ்வாறு அவர் கூறினார்.