அண்ணா பல்கலை தர பட்டியல் வெளியீடு பி. எஸ். ஆர். இன்ஜி., கல்லூரிக்கு 5ம் இடம்

சென்னை அண்ணா பல்கலை வெளியிட்டுள்ள இன்ஜினியரிங் கல்லுாரிகளுக்கான தர வரிசைப் பட்டியலில், சிவகாசி பி. எஸ். ஆர். இன்ஜினியரிங் கல்லுாரி மாநில அளவில் ஐந்தாவது இடத்தைப் பெற்றுள்ளதாக,” கல்லுாரி தாளாளர் சோலைசாமி கூறினார்.

அவர் கூறியதாவது:சென்னை அண்ணா பல்கலை ஆண்டு தோறும் மாணவர்களின் தேர்ச்சி சதவீத அடிப்படையில் இன்ஜினியரிங் கல்லுாரிகளுக்கான தரவரிசைப் பட்டியலை வெளியிடுகிறது. கடந்த 2015 ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடந்த தேர்வு முடிவுகளின் அடிப்படையில் தமிழகத்தில் உள்ள 522 இன்ஜினியரிங் கல்லுாரிகளின் தரவரிசைப் பட்டியலை நேற்று வெளியிட்டது.
இதில் சிவகாசி பி. எஸ். ஆர். இன்ஜினியரிங் கல்லுாரி 93. 07 சதவீதம் தேர்ச்சி பெற்று மாநில அளவில் 5வது இடத்தை பெற்றுள்ளது. தென் தமிழகத்தில் உள்ள இன்ஜினியரிங் கல்லுாரிகளில் முதலிடத்தை பெற்றுள்ளது,என்றார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...