ரத்த தானத்தின் அவசியத்தை வலியுறுத்தி ஆண்டுதோறும் ஜூன் 14ல், உலக ரத்த தான தினம் கடைபிடிக்கப்படுகிறது.'ரத்தம் அனைவரையும் இணைக்கிறது' என்பது
இந்தாண்டு மையக்கருத்து. உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள தகவல்கள்: உலகளவில் ஆண்டுக்கு 1.2 கோடி யூனிட் ரத்தம் தேவைப்படுகிறது. ஆனால் 90 லட்சம் யூனிட் ரத்தம் மட்டுமே கிடைக்கிறது. l கடந்த 2015ல்
உலகளவில் 10.8 கோடி பேர் ரத்த தானம் செய்தனர். இதில் சரிபாதி அதிக வருமானம் உடைய நாடுகளை சேர்ந்தவர்கள். 2004ல் ஒப்பிடும் போது இது 25 சதவீதம் அதிகம். அப்போது 8 கோடி பேர் ரத்த தானம் செய்தனர். l தானமாக கிடைக்கும் ரத்தம், குறைந்த வருமானம் உடைய நாடுகளில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு 65 சதவீதம் பயன்படுத்தப்படுகிறது. அதே நேரத்தில் அதிக வருமான உடைய நாடுகளில் 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 75 சதவீத ரத்தம் பயன்படுத்தப்படுகிறது.
l உலகளவில் ரத்த தானம் செய்பவர்களில் 30 சதவீதம் பேர் பெண்கள்.
l ரத்த தானம் செய்பவர்களில் 40 சதவீதம் பேர் 25 முதல் 44 வயதுக்குட்பட்டவர்கள்.
l அதிக வருமான உடைய நாடுகளில் 1000 பேருக்கு 37 பேர் ரத்த தானம் செய்கின்றனர். ஆனால் நடுத்தர வருமான நாடுகளில் 12 பேரும், குறைந்த வருமான நாடுகளில் 4 பேரும் ரத்த தானம் செய்கின்றனர்.
l 2004ல் இருந்து 2012ஐ ஒப்பிடும் போது தானாக முன்வந்து ரத்த தானம் செய்தவர்களின் எண்ணிக்கை (80 லட்சம் பேர்) அதிகரித்துள்ளது. 73 நாடுகள் ரத்தத்தை, 90 சதவீதம் தானாக முன்வந்து ரத்த தானம் செய்பவர்களிடம் இருந்து பெறுகின்றன. 72 நாடுகள், உறவினர்கள்/நண்பர்கள் அல்லது பணம் கொடுத்தல் ஆகிய வகையில் தான் 50 சதவீத்துக்கு மேல் ரத்த தானத்தை பெறுகின்றன. l 2020க்குள் அனைத்து நாடுகளும், தானாக முன்வந்து ரத்த தானம் செய்பவர்கள் மூலமே 100 சதவீதம் ரத்தத்தை பெற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தயக்கம் ஏன்?
பயம் மற்றும் நோய் உருவாகும் என்ற தவறான எண்ணமே இந்தியாவில் மக்கள் ரத்த தானம் செய்ய தயங்குவதற்கு காரணம் என டாக்டர்களிடம் நடத்திய கருத்து கணிப்பு தெரிவிக்கிறது. இது குறித்து டாக்டர் ஒருவர் கூறுகையில்,''ரத்த தானம் செய்வதன் மூலம் எச்.ஐ.வி., உள்ளிட்ட நோய்கள் ஏற்படும் என தவறாக நினைப்பதால் ரத்த தானம் செய்ய தயங்குகின்றனர். தானம் செய்த ரத்தம் இரண்டு மாதங்களில் 100 சதவீதம் மீண்டும் உற்பத்தியாகி விடும். ரத்த தானம் செய்வது பல வழிகளிலும் உடலுக்கு நன்மையே அளிக்கும்,'' என்றார்.