ஊதிய உயர்வின்றிப் பணியாற்றி வருவதாக, பகுதி நேர சிறப்பாசிரியர்கள் .

கடந்த 2 ஆண்டுகளாக ஊதிய உயர்வின்றிப் பணியாற்றி வருவதாக, பகுதி நேர சிறப்பாசிரியர்கள் தெரிவித்தனர்.கடந்த 2000-ஆம் ஆண்டு வகுக்கப்பட்ட புதிய கல்விக் கொள்கையின்படி, மாணவ-மாணவிகளுக்கு உடல்திறன், கலைத்திறன், தனித்திறன்,
தொழிற்திறன் ஆகியவற்றை வளர்க்க வேண்டும் என்பதற்காக சிறப்பாசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டது.

இதைச் செயல்படுத்த அனைவருக்கும் கல்வி இயக்கம் (எஸ்எஸ்ஏ) திட்டத்துக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், தமிழகத்தில் பல ஆண்டுகள் இந்தப் பணியிடங்கள் உருவாக்கப்படவில்லை.

ஊதிய உயர்வு இல்லை:

இந்த நிலையில், கடந்த 2011-ஆம் ஆண்டு பகுதி நேர சிறப்பாசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என முதல்வர்ஜெயலலிதா அப்போது அறிவித்தார். அதைத் தொடர்ந்து, பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அறிவிப்பின்படி, அனைவருக்கும் கல்வி இயக்ககம் மூலம் ஓவியம், உடற்கல்வி,தையல், இசை, கணினி, கட்டடக்கலை, தோட்டக்கலை, வாழ்வியல் திறன் ஆகியப் பாடங்களுக்கு பகுதிநேர சிறப்பாசிரியர்கள் நியமிக்கும் வகையில் 16 ஆயிரத்து 549 புதியப் பணியிடங்கள் உருவாக்கப்பட்டன.அதன்படி 2012-ஆம் ஆண்டு மார்ச் மாதம் பகுதி நேர பணியில் சிறப்பாசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டு, அவர்களுக்கு ரூ.5000 ஊதியமாக நிர்ணயிக்கப்பட்டது.இவர்களுக்கு ஆண்டுதோறும் ஊதியத்தில் 10 சதவீதம் ஊதியஉயர்வு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. ஆனால், 2014-ஆம் ஆண்டு வரை மட்டும் ரூ. 2,000 உயர்த்தப்பட்டு ரூ.7,000 தொகுப்பு ஊதியம் வழங்கப்பட்டது. அதன்பிறகு எந்த வித ஊதிய உயர்வும் வழங்கப்படவில்லை என ஆசிரியர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து, பகுதிநேர சிறப்பாசிரியர்கள் சங்க மாநிலத் தலைவர் கு.சேசுராஜா கூறியது:

வறுமையில் ஆசிரியர்கள்:பகுதி நேர சிறப்பாசிரியர்கள், தற்போது உரிய ஊதியமின்றி மிகவும் வறுமையில் உள்ளனர். இவர்களில் 500-க்கும் மேற்பட்ட சிறப்பாசிரியர்கள் பணி நிரந்தரம் ஆகாமலேயே பணி ஓய்வு பெற்றுள்ளார்கள். 62 ஆசிரியர்கள் மரணம் அடைந்து உள்ளனர். ஆனால், அவர்களின் குடும்பத்துக்கு எந்தவித நிதியுதவியும் கிடைக்கவில்லை.பகுதிநேர ஆசிரியைகளுக்கு கர்ப்பக்கால விடுப்பு எடுத்தால் ஊதியமும் கிடையாது. வேலைக்குப் போனால் மட்டுமே சம்பளம் என்ற நிலையில் இருப்பதால், மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றனர்.எனவே பகுதி நேர சிறப்பாசிரியர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். அத்துடன் எங்களுக்கான ஊதிய உயர்வை முறையாக வழங்க வேண்டும். எங்களுடைய கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் திங்கள்கிழமையன்று (ஜூன் 20), ஒரு லட்சம் கருணை மனுக்கள் அனுப்ப திட்டமிட்டு உள்ளோம். அதைத் தொடர்ந்து ஜூலை 9-ஆம் தேதி அரசின் கவனத்தை ஈர்க்க சென்னையில் பேரணி நடத்தவும் திட்டமிட்டுள்ளோம் என்றார் அவர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...