மத்திய அரசு ஊழியர்களின் ஊதிய உயர்வு தொடர்பான ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரையைப் பரிசீலித்த மத்திய அமைச்சரவை அதற்கு ஒப்புதல் அளித்தது. ஆனால், ‘இது மத்திய அரசு ஊழியர்களுக்கு எதிரானதாகவே உள்ளது. எங்கள் நியாயமான எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யவில்லை’ என மத்திய அரசு ஊழியர் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
குறிப்பாக ‘எங்கள் மத்திய அரசு ஊழியர்களின் கூட்டு போராட்டக் குழுவின் முக்கிய கோரிக்கையான குறைந்தபட்ச சம்பளம் ரூ.26,000/- ஏற்க மறுத்து ரூ.18,000/- மட்டுமே மத்திய அமைச்சரவை அறிவித்துள்ளது. இதை நாங்கள் ஏற்கவில்லை. எங்கள் கூட்டு போராட்டக் குழுவின் நியாயமான கோரிக்கையை ஏற்று எங்களுக்கு குறைந்தபட்ச சம்பளம் ரூ.26,000/- வழங்கவேண்டும். எங்கள் கோரிக்கைக்குச் செவி சாய்க்காவிட்டால் ஜூலை 11ஆம் தேதி எங்கள் பொது வேலை நிறுத்தத்தை நடத்தியே தீருவோம். இதனால் ரயில் பயணிகள், சரக்கு போக்குவரத்து சேவைகள் பாதிக்கப்பட்டு, நாட்டில் பெரும் பொருளாதார சீர்குலைவு ஏற்படுவதற்கு மத்திய அரசே பொறுப்பேற்க வேண்டும்’ என்று தெரிவித்திருந்தார் எஸ்.ஆர்.எம்.யு. பொதுச் செயலாளர் கண்ணையா. இந்நிலையில், ஜூலை 11ஆம் தேதி முதல் நடைபெறவிருந்த ரயில்வே ஊழியர்களின் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டதாக அவரே அறிவித்துள்ளார்.
இதுகுறித்து எஸ்ஆர்எம்யு பொதுச் செயலாளர் கண்ணையா இன்று செய்தியாளர்களிடம் பேசியபோது, ‘ரயில்வே ஊழியர்களின் கோரிக்கைகளை பேச்சு வார்த்தை மூலம் சுமூகமாக தீர்க்கலாம் என மத்திய அரசு உறுதி அளித்ததால் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை ஒத்திவைப்பது என்று எஸ்ஆர்எம்யு முடிவு செய்துள்ளது’ என்று கூறினார்.
மேலும், ‘மத்திய அரசு ரயில்வே ஊழியர்களின் அடிப்படை ஊதியத்தை உயர்த்தி தரவும் ஒப்புக் கொண்டுள்ளது. அத்துடன் ரயில்வே தனியார் மயமாக்கத்துக்கு எதிராக வேலை நிறுத்தமும் நடைபெறவிருந்தது. இந்த விவகாரத்தில் பிரதமர் தலையிட்டு அமைச்சர்கள் குழுவோடு நடத்திய பேச்சு வார்த்தையின் அடிப்படையில் வேலை நிறுத்தம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது’ என்றும் கூறினார்.