மத்திய அரசு ஊழியர்களின் ஊதிய உயர்வு தொடர்பான ஏழாவது ஊதியக்குழுவின் பரிந்துரையைப் பரிசீலித்த மத்திய அமைச்சரவை அதற்கு ஒப்புதல் அளித்தது. ஆனால், இது மத்திய அரசு ஊழியர்களுக்கு எதிரானதாகவே உள்ளது. ‘எங்கள் நியாயமான எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை’ என தொடர்ந்து போராடி வருகின்றன மத்திய அரசு ஊழியர் சங்கங்கள். வரும் ஜூலை 4ஆம் தேதி முதல் 8ஆம் தேதி வரை அனைத்து அரசு அலுவலகங்கள் முன்பும் கண்டன
ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என்றும் அறிவித்துள்ளன. இதுகுறித்து விரிவாகவே பேசுகிறார் மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளன மாநில பொதுச் செயலாளர் வே. துரை பாண்டியன். அவர் கூறியதாவது:
‘ஏழாவது ஊதியக்குழுவில் மத்திய அரசு ஊழியர்களுக்கு மத்திய அரசு துரோகம் இழைத்துள்ளது. சம்பளக் கமிஷன் அறிக்கை கொடுக்கப்பட்டவுடன், உயர்நிலைக் குழு பி.கே.சின்கா தலைமையில் அமைக்கப்பட்டது. அந்தக்குழு கடந்த பல மாதங்களாக சங்கத்துடன் பேச்சு வார்த்தை நடத்தியது. ஆனால், நடத்தப்பட்ட பேச்சு வார்த்தை எல்லாம் அதிகாரப்பூர்வமற்றது என்று கூறுகிறார்கள். சம்பளக் கமிஷன் பரிந்துரையை அப்படியே அந்த உயர்நிலைக் குழு அமல்படுத்தி உள்ளது.
1957ஆம் ஆண்டு இரண்டாவது சம்பளக் கமிஷனிலேயே 14.2 சதவிகித ஊதிய உயர்வு பெற்றோம். தற்போது ஏழாவது சம்பளக் கமிஷன் 14.3 சதவிகிதத்தை உயர்த்தியுள்ளது. அப்போது இருந்த விலைவாசியும் தற்போது உள்ள விலைவாசியும் ஒன்றா? இப்போது பீன்ஸ் ரூபாய் 180-க்கு விற்கிறது. ஏழாவது சம்பளக் கமிஷன் சம்பளத்தை உயர்த்தி வழங்கும் அறிக்கையாக இல்லை. சம்பளத்தை பறிக்கும் அறிக்கையாக உள்ளது. உதாரணமாக ஆரம்பநிலை (எம்.டி.எஸ்) ஊழியர் ரூபாய் 15,750 சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தார். இந்த ஏழாவது சம்பளக் கமிஷன் மூலம் அவர் ரூபாய் 18,000 வாங்குவார். ஆனால், அவரிடமிருந்து ஓய்வூதிய திட்டத்துக்காக ரூபாய் 1,800-ம், காப்பீட்டுக்காக ரூபாய் 3,300-ம் பிடித்தம் செய்யப்படும். அவருக்கு ஊதிய உயர்வு ரூபாய் 2,250. ஆனால், பிடித்தம் செய்யப்போவதோ ரூபாய் 3,300. அப்படியென்றால் அவர் ஏற்கனவே வாங்கிய சம்பளத்தில் இருந்து கூடுதலாக ரூபாய் 1,050 பிடித்தம் செய்யப்படும்.
மத்திய அரசு ஊழியர்களுக்காக ரூபாய் 1.2 லட்சம் கோடி செலவு செய்ய வேண்டுமா என்று சிலர் கேட்கிறார்கள். இவை மத்திய அரசு ஊழியர்களுக்கு மட்டும் வழங்கப்படுவதில்லை. மத்திய அரசு ஊழியர்கள், 30 லட்சம் முப்படை வீரர்கள், ஓய்வூதியதாரர்கள் 48 லட்சம் பேர் என அனைவருக்கும் வழங்கப்படுகிறது. இதிலும் ரூபாய் 60 ஆயிரம் கோடி எங்களிடமே வருமான வரி உள்ளிட்டவைகள் மூலம் பிடித்தம் செய்யப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் காலியாக உள்ள 6 லட்சம் பணியிடங்களை நிரப்பாமல் அரசு, ரூபாய் 1 லட்சத்து 8 ஆயிரம் கோடியை மிச்சப்படுத்தியுள்ளது. எனவே, அரசு அறிவித்துள்ள ஏழாவது சம்பளக் கமிஷன் பரிந்துரைகளை மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனம் ஏற்கவில்லை. எனவே, நாங்கள் போராட்டத்தின் மூலம் எங்கள் உரிமைகளை வெல்ல தீர்மானித்துள்ளோம்’ என்றார்.