13 பள்ளி மாணவர்கள் டிஸ்மிஸ்...!

நல்ல போதனைகளை கற்றுக்கொடுக்கும் பள்ளியிலே, சமூகச் சீர்கேடான விஷயங்கள் தற்போது நடக்கிறது. அரியலூர் மாவட்டத்தில் ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபட்ட 13 மாணவர்கள் டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


அரியலூர் மாவட்டம், குறிச்சிக்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-1 வகுப்பில் படிக்கும் 4 மாணவர்களும், பிளஸ்-2 வகுப்பு மாணவர்கள் இரண்டு மாணவர்களும் சேர்ந்து மது அருந்திவிட்டு பள்ளிக்குச் சென்று தகராறு செய்துள்ளனர். இதுபற்றி பள்ளி நிர்வாகம் முதன்மைக் கல்வி அலுவலருக்கு தகவல்சொல்ல, வந்த முதன்மைக் கல்வி அலுவலர் மாரிமுத்து இந்த 6 மாணவர்களையும் பள்ளியிலிருந்து டிஸ்மிஸ் செய்து மாற்றுச் சான்றிதழ் வழங்குமாறு உத்தரவிட்டார். இதேபோன்று, கடந்த 30ஆம் தேதி அரியலூர் மாவட்டம், செந்துறை அரசு ஆண்கள் பள்ளி மாணவர்கள் இருவர் கடைக்குச் செல்லும்போது, இருவருக்கும் தகராறு ஏற்பட்டு, பின்பு கோஷ்டி மோதலாக மாறி கைகலப்பு ஏற்பட்டது. இதுதொடர்பான புகாரும் முதன்மைக் கல்வி அலுவலர் மாரிமுத்துவுக்குச் செல்ல நேரில் சென்று விசாரித்த மாரிமுத்து வன்முறையை உருவாக்கும்நோக்கில் செயல்பட்டதாலும், சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படுத்தும் நிலை ஏற்பட்டதாலும் அந்தப் பள்ளியில் பிளஸ்-1 வகுப்பைச் சேர்ந்த 4 மாணவர்களும், பிளஸ்-2 வகுப்பைச் சேர்ந்த 3 மாணவர்களுமாக மொத்தம் 7 மாணவர்களை பள்ளியிலிருந்து டிஸ்மிஸ் செய்ய உத்தரவிட்டார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...