ஒன்பது ஆண்டுகள் ஆகிறது பிளஸ்-2 பாடத்திட்டத்தை மாற்றி!

தமிழக அரசு 5 ஆண்டுக்கு ஒருமுறை அன்றைய காலகட்டத்துக்கு ஏற்ப பாடத் திட்டங்களை மாற்றியமைத்து புதிய பாடத் திட்டங்களை பள்ளி மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தும். தற்போது, பிளஸ்-2 பாடத் திட்டத்தை மாற்றியமைப்பது குறித்து தமிழக அரசு
பரிசீலனை செய்து வருகிறது. தற்போது நடைமுறையில் உள்ள பிளஸ்-1, பிளஸ்-2 பாடத்திட்டம் தயாரித்து 9 வருடங்கள் ஆகிறது. இதனால், பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டத்தை தயாரிக்க தமிழக அரசு முடிவுசெய்தது.

பாடத் திட்டத்தை தயாரிக்கும் பொறுப்பை சென்னை டி.பி.ஐ.வளாகத்தில் உள்ள பள்ளிக்கல்வி இயக்குநரகம், மாநில ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி இயக்குநரகத்திடம் ஒப்படைத்தது. இதையடுத்து, முன்னாள் அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் நாகபூஷன ராவ் தலைமையில் பிளஸ்-1, பிளஸ்-2 பாடத்திட்டம் தயாரிக்க குழு அமைக்கப்பட்டது. ஒவ்வொரு பாடத்துக்கும் நல்ல அனுபவம்வாய்ந்த 3 ஆசிரியர்கள் அடங்கிய குழு நியமிக்கப்பட்டது. பிளஸ்-1 பாடத்துக்கு 18 தலைப்புகளிலும், பிளஸ்-2 பாடத்துக்கு 18 தலைப்புகளிலும் வரைவு பாடத் திட்டம் தயாரிக்கப்பட்டது. பொதுமக்கள் மற்றும் கல்வியாளர்களின் கருத்துகளைக் கேட்பதற்காக மாவட்டத் தலைநகரங்களில் கூட்டம் நடத்தப்பட்டு அவர்களின் சிறந்த ஆலோசனைகளும், கருத்தும் ஏற்கப்பட்டன.

கடந்த 2013ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம் அந்த வரைவு பாடத் திட்டம் இணையதளத்தில் வெளியிடப்பட்டு கருத்துகள் கேட்கப்பட்டன. அந்த கருத்துகளில் தேவையானவை மட்டும் ஏற்கப்பட்டு பாடத் திட்டம் தயாரிக்கப்பட்டது. இந்த பாடத் திட்டம் அரசின் ஒப்புதலுக்கு வைக்கப்பட்டுள்ளது. இப்போதைய பிளஸ்-1, பிளஸ்-2 பாடத் திட்டம் அடுத்த கல்வி ஆண்டில் மாறினால் 2017-2018ஆம் ஆண்டு பிளஸ்-1 வகுப்புக்கும், 2018-2019ஆம் ஆண்டு பிளஸ்-2 வகுப்புக்கும் அறிமுகப்படுத்தப்படும்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...