பள்ளி துவங்கி 18 நாட்களாகியும் பாடப்புத்தகம் வழங்கவில்லை பிளஸ் 1 மாணவர்கள் அவதி

பிளஸ்1 மாணவர்களுக்கு பள்ளி துவங்கி 18 நாட்களாகியும் பாடப்புத்தகம் வழங்கப்படாததால் ஆசிரியர்கள் நடத்தும் பாடங்களை கவனிக்க முடியவில்லை என மாணவர்கள் தெரிவிக்கின்றனர். தமிழகம் முழுவதும் பிளஸ்1 வகுப்புகள் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஜூன் 23ம் தேதி துவங்கியது. மெட்ரிக் பள்ளிகளில் ஜூன் 15ம் தேதி துவங்கியது. பிளஸ் 1
வகுப்பில் உள்ள கணிதம், அறிவியல், கம்ப்யூட்டர், பொருளாதாரம், வரலாறு, தொழில்கல்வி உள்ளிட்ட அனைத்து பிரிவுகளுக்கும் அரசால் வழங்க வேண்டிய இலவச பாடநூல்கள் வழங்கப்படவில்லை. பாடநூல்கள் வெளிச்சந்தையிலும் கிடைக்காததால் மாணவர்கள் வெறுமனே பள்ளிகளுக்கு சென்று வருகின்றனர். பாடநூல்கள் இல்லாததால் பல பள்ளிகளில் ஆசிரியர்கள் பாடங்களை நடத்தவில்லை.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...