பள்ளிக் கட்டணம் செலுத்த வழியில்லை... கிரண்பேடியின் காலில் விழுந்து அழுத மாணவர்

தனியார் பள்ளியில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதை தடுக்க நடிவடிக்கை எடுக்க வேண்டும் என புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண் பேடியின் காலில் விழுந்து தனியார் பள்ளி மாணவர் ஒருவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி நேற்று முதலியார்பேட்டை துலுக்காணத்தம்மன் நகரில் நேற்று
துப்புரவு பணிகளை மேற்கொண்டார். அப்போது அங்குவந்த மாணவர் ஒருவர் கிரண் பேடியின் காலை பிடித்துக் கொண்டு அழுதார். அந்த மாணவர் பெயர் தட்சிணாமூர்த்தி புதுவை தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார்.


அப்போது அந்த மாணவர், தான் படிக்கும் பள்ளியில் கல்விக்கட்டணம் அதிகமாக இருக்கிறது. நான் ஏழ்மை குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால், எனது குடும்பத்தால் அந்த பள்ளிக் கட்டணத்தை செலுத்த முடியவில்லை என கூறினார். எனவே பள்ளி கட்டணத்தை குறைக்க நடிவடிக்கை எடுக்க வேண்டும் என கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்த அந்த மாணவர், அது குறித்து கோரிக்கை மனு ஒன்றையும் கிரண் பேடியிடம் அளித்தார்.
அருகில் இருந்த புதுவை நகராட்சி ஆணையர் சந்திரசேகரனை அழைத்த கிரண்பேடி, மாணவன் படிக்கும் பள்ளி குறித்த விவரங்களை கேட்டறிந்தார். அப்போது அந்த பள்ளியில் கல்வி கட்டணச் சலுகை உள்ளது என்றும், அது குறித்து மாணவனின் பெற்றோருக்கு தெரியாமல் இருந்திருக்கலாம் என நகராட்சி ஆணையர் கிரண்பேடியிடம் கூறினாராம். இதுகுறித்து பள்ளி தாளாளரிடம் பேசுவதாக கிரண்பேடி மாணவரிடம் உறுதியளித்தார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...