திருமங்கலம் பள்ளக்காபட்டியில் 4 மாணவியருக்கு இரண்டு ஆசிரியைகள், இரண்டு சத்துணவு அமைப்பாளர்களுடன் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி செயல்படுகிறது.
திருமங்கலம் உரப்பனுார் ஊராட்சிக்குட்பட்டது பள்ளக்காப்பட்டி.
1978ல் துவக்கப்பள்ளி துவக்கப்பட்டது. பள்ளியில் அதிகபட்சம் 40 பேர் படித்தனர். சில ஆண்டுகளாக மாணவர்கள் சேர்க்கை குறைந்து கொண்டே வந்தது.
நடப்பாண்டில், நான்கு மாணவியர் மட்டுமே பயின்று வருகின்றனர். இதற்கு இரண்டு ஆசிரியைகள், இரண்டு சத்துணவு அமைப்பாளர்கள் உள்ளனர். 2009ல் ரூ.1.50 லட்சத்தில் மராமத்து பணிகள் நடந்தன. ஆனால் பள்ளி கட்டட மேற்கூரை இடியும் நிலையிலும், சுற்றுபுறம் முட்களால் சூழப்பட்டும் உள்ளது. வகுப்பறைகள் பாழடைந்துள்ளன.
பள்ளிக்கு வந்திருந்த ஒரு மாணவியும் வெளியில் சென்றதால், பள்ளி வெறிச்சோடியிருந்தது. மாணவிகள் எண்ணிக்கை குறித்து பதிலளிக்க பள்ளி தலைமையாசிரியர் மறுத்து விட்டார். இதுபோன்ற பள்ளிகளால், அரசு பணம் விரயம் ஆவதுடன், மக்களிடம் மதிப்பும் குறைகிறது. மாவட்ட கல்வி அலுவலர்கள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.