பழக்கத்துக்கு அடிமையான கல்லுாரி மாணவர், நேற்று முன்தினம் இறந்தார்...!

மதுரையில், தனக்கு தானே போதை ஊசி ஏற்றும் பழக்கத்துக்கு அடிமையான கல்லுாரி மாணவர், நேற்று முன்தினம் இறந்தார். சென்னையில் போதை ஏற்படுத்தும், 'கஞ்சா சாக்லேட்' விற்பனை அமோகமாக நடந்து வரும் நிலையில், மதுரையில் மாணவர்கள் சிலர் வித்தியாசமான முறையில், 'போதை' ஏற்றி வருகின்றனர்.


          சைக்கிள், டூ - வீலர் டியூப்களுக்கு, 'பஞ்சர்' ஒட்டும், 'பேஸ்ட்' மற்றும் பெட்ரோலை அளவுக்கு அதிகமாக நுகர்ந்து போதை ஏற்றிக்கொள்கின்றனர். இந்நிலையில், போதை ஊசியும் பயன்படுத்தி வருவது, பெற்றோ-ரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. மதுரை, அய்யர் பங்களாவைச் சேர்ந்த ரமேஷ்பாபுவின் மகன் தினேஷ்பாபு, 20; பி.ஏ., ஆங்கிலம் படித்து வந்தவர், சில மாதங்களாக கல்லுாரிக்கு செல்லவில்லை. போதை ஊசிக்கு அடிமையான இவர், தனியார் மருத்துவமனை மற்றும் போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று முன்தினம், நண்பர்களுடன் சேர்ந்து போதை ஊசியை ஏற்றிக் கொண்டதால், வலிப்பு ஏற்பட்டு இறந்ததாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அவரது வீட்டிற்கு சென்ற போது, இறுதி சடங்குகள் ஏற்பாட்டில் குடும்பத்தினர் ஈடுபட்டிருந்தனர். பின், தினேஷ்பாபு உடலை, போலீசார் பிரேத பரிசோதனைக்காக எடுத்துச் சென்றனர்.
போதை மறுவாழ்வு மையத்தில், முறையாக சிகிச்சை எடுக்காததால், தினேஷ்பாபு இறந்ததாக, அவரது குடும்பத்தினர் போலீசாரிடம் தெரிவித்து உள்ளனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...