2-8 ம் வகுப்பு வரை மாணவர்களின் திறன்களை ஆய்வு செய்ய உத்தரவு....!

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், இரண்டு முதல் எட்டாம் வகுப்பு வரை வாசித்தல்,எழுதுதல் மற்றும் எளிய கணக்குகளை செய்தல் குறித்து மாணவர்களின் திறன்களை ஆய்வு செய்ய ஆசிரியர் பயிற்றுனர்களுக்கு அனைவருக்கும் கல்வி இயக்ககம் அறிவுறுத்தியுள்ளது.


ஒவ்வொரு கல்வியாண்டிலும், குறிப்பிட்ட கால இடைவெளியில், அனைவருக்கும் கல்வி இயக்க ஆசிரியர் பயிற்றுனர்கள் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்டு மாணவர்களின் அடிப்படை கற்றல் திறன்களை கண்டறிந்து, கல்வித்துறைக்கு அனுப்புகின்றனர். இதில், தமிழ் மற்றும் ஆங்கில பாடத்தில், வாசித்தல், எழுதுதல் மற்றும் எளிய அல்லது கடின கணக்குகளை போடுதல் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும்.

நடப்பு கல்வியாண்டுக்கான முதற்கட்ட ஆய்வுகளை, ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதத்தில் நடத்தவும், இரண்டாம் கட்ட ஆய்வுகளை, 2017 ம் ஆண்டு பிப்., மார்ச் மாதத்தில் இரண்டாம் கட்ட ஆய்வுகளை நடத்தவும் கல்வித்துறை சுற்றறிக்கை விடுத்துள்ளது.

இரண்டாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை, உள்ள அனைத்து மாணவர்களின் கல்வித்திறனும் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டுமெனவும், ஜூலை மற்றும் ஆக., மாத ஆய்வு அறிக்கைகளை, முறையே, ஆக., மற்றும் செப்., 5 ம்தேதிக்குள் அனுப்ப வேண்டுமெனவும் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...