பாலிடெக்னிக், பிஎஸ்சி தேர்ச்சி பெற்ற மாணவர்கள் பொறியியல் கல்லூரிகளில் பிஇ நேரடி 2ம் ஆண்டில் சேரலாம். தமிழகத்தில் உள்ள 526 பொறியியல் கல்லூரிகளில் பிஇ நேரடி 2ம் ஆண்டு சேர்க்கைக்கு 20% இடங்கள் ஒதுக்கப்படுகின்றன. இதற்கான கவுன்சலிங் சிவகங்கை மாவட்டம்,
காரைக்குடி அழகப்ப செட்டியார் அரசு பொறியியல் மற்றும் தொழில்நுட்பக்கல்லூரியில் ஜூன் 29ம் தேதி துவங்கி நேற்று வரை நடந்தது.
இதுகுறித்து கல்லூரி முதல்வரும், சேர்க்கை செயலாளருமான ராஜகுமார் கூறுகையில், ''பிஇ நேரடி இரண்டாம் ஆண்டு சேர்க்கைக்கு 97 ஆயிரத்து 836 இடங்கள் ஒதுக்கப்பட்டு இருந்தன. இதில் சிவில் 2,948, மெக்கானிக்கல் 5,067, எலெக்ட்ரிக்கல் 4,463 பேர், கெமிக்கல் 129, டெக்ஸ்டைல்ஸ் 14, லெதர் 5, பிரிண்டிங் 6 என மொத்தம் 12 ஆயிரத்து 782 பேருக்கு சேர்க்கை ஆணை வழங்கப்பட்டது.

பிஎஸ்சி முடித்தவர்கள் 10 பேர் சேர்ந்துள்ளனர். மீதம் 85 ஆயிரத்து 54 இடங்கள் காலியாக உள்ளன. 13ம் தேதிக்குள் மாணவர்கள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட கல்லூரிகளில் சேர வேண்டும். பெரும்பாலானோர் மெக்கானிக்கல் பிரிவு எடுக்கவே, அதிக விருப்பம் காட்டினர்,'' என்றார்.