உடல் நலத்துக்கு கேடு விளைவிக்கும் கலர் மிட்டாய் விற்பனை...!

செயற்கை ரசாயனங்களால் நிறமூட்டி, உடல் நலத்துக்கு ஊறு விளைவிக்கும் கலர் மிட்டாய்கள் கொடைக்கானலில் அமோகமாக விற்பனையாகின்றன. இந்த மிட்டாய்களின் விற்பனையை தடுக்க சுகாதாரத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர். பிரசித்தி
பெற்ற சுற்றுலாத் தலமான திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில், நகரில் உள்ள அனைத்து கடைகளிலும் பல வண்ணங்களில் இனிப்பு மிட்டாய்கள் விற்கப்படுகின்றன. மாம்பழம், ஆரஞ்சு, ஸ்ட்ராபெரி மற்றும் கொய்யா உள்ளிட்ட பழங்களின் நிறங்களும், சுவைகளும் கூடிய பல்வேறு வகையிலான மிட்டாய்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

இந்த மிட்டாய்களில் நிறமூட்ட செயற்கை ரசாயனங்களே பயன்படுத்தப்படுகின்றன.


இவை உடலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியவை. இது தவிர கலாக்காய் எனப்படும் காயை நன்கு வேக வைத்து, அதனை சீனிப்பாகில் ஊற வைத்து, நன்கு சிகப்பு நிறத்தை ஏற்றி, அஜினமோட்டோ போன்ற கலவைகளை சேர்த்து, செர்ரிப் பழ மிட்டாய் என்று சுற்றுலாப் பயணிகளை ஏமாற்றி விற்கின்றனர். பல்வேறு வண்ணங்களில் விற்கப்படும் இந்த மிட்டாய்களுக்கு மருந்து மற்றும் உணவுக் கட்டுப்பாட்டு துறையின் தரச்சான்று ஏதும் கிடையாது.

இது தெரியாமல் கொடைக்கானல் வரும் சுற்றுலாப் பயணிகள் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையில், இந்த கலர் மிட்டாய்களை வாங்கிச் சாப்பிடுகின்றனர். நோய்களை உண்டாக்கும் இந்த மிட்டாய்களை மருந்து மற்றும் உணவுக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் முறையாக ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்றும், இங்குள்ள கடைகளை ஆய்வு செய்து, கலப்பட மிட்டாய்கள் விற்பனையை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கொடைக்கானல் பகுதி சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

கொடைக்கானல் பகுதியை சேர்ந்த பள்ளி ஆசிரியர் ஒருவர் கூறுகையில், ``பள்ளி குழந்தைகளும் இந்த மிட்டாய்களை வாங்கி சாப்பிடுகின்றனர். சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில், இந்த மிட்டாய்கள் கொடைக்கானல் ஸ்பெஷல் என்று கூறி, பாலித்தீன் கண்ணாடி பேப்பர்களில் நன்றாக பேக்கிங் செய்து விற்கின்றனர். இந்த மிட்டாய்களை சுகாதாரத் துறையினர் ஆய்வுக்கு உட்படுத்தி, பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்'' என்றார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...