பி.எட்., பட்டதாரிகளுக்கு ஊக்க ஊதியம்!!!

இடைநிலை ஆசிரியராக நியமிக்கப்பட்ட பி.எட்.,பட்டதாரிகளுக்கு உயர்கல்விக்கு ஊக்க ஊதிய உயர்வு வழங்க அரசுக்கு தொடக்கக் கல்வித்துறை பரிந்துரை செய்துள்ளது.அரசு மற்றும் உதவிபெறும் பள்ளிகளில் இனசுழற்சி முறையில் நியமிக்க ஆதிதிராவிடர்,பழங்குடியினர் இடைநிலைஆசிரியர்களுக்கு
பற்றாக்குறை ஏற்பட்டது.
இதையடுத்து1999ல் ஆதிதிராவிடர்,பழங்குடியினரில் பி.எட்.,பட்டதாரிகள் இடைநிலை ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டனர். அவர்களுக்கு இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் ஊக்க ஊதிய உயர்வு மறுக்கப்பட்டது.அவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதையடுத்து உயர்கல்விக்கு ஊதியம் உயர்வு வழங்க அரசுக்கு தொடக்கக் கல்வித்துறை பரிந்துரை செய்துள்ளது.இதில் செலவு தொகை குறித்து தொடக்கக் கல்வித்துறை இயக்குனரிடம் அரசு விளக்கம் கேட்டுள்ளது.

இதையடுத்து பணி நியமனம் அல்லது அதற்குபின் பட்டதாரி கல்வி தகுதிக்கு மேல் இருந்தால் உயர் கல்வியில் இரு ஊக்க ஊதிய உயர்வு கருத்தியலாகவும், 2016-17கல்வியாண்டு முதல் பணப்பயன் மற்றும் ஓய்வூதியர்களுக்குஓய்வூதிய பலனுக்காக மட்டும் கருத்தியலாகவும் வழங்க தேவையான செலவு விபரத்தை கேட்டு மாவட்டத் தொடக்கக் கல்விஅலுவலகங்களுக்கு இயக்குனரகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.இதனால் இடைநிலை ஆசிரியராக நியமிக்கப்பட்ட பி.எட்.,பட்டதாரி ஆசிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...