பழையஓய்வூதியத்திட்டம்மீண்டும் அமுல்படுத்தப்படுமா ?

அரசுஊழியர்கள்,ஆசிரியர்கள் இவர்களுக்கான பழையஓய்வூதியத்திட்டம்மீண்டும் அமுல்படுத்தப்படும்என்று தேர்தல்கால வாக்குறுதி முதல்வர் அவர்கள் அறிவித்தார்கள்,சட்டமன்றத்தில் அதற்குரிய ஆய்வுக்குழு ஆய்வு நடந்துவருவதாக மாண்புமிகு நிதியமைச்சர் அறிவித்தார்,  ஆனால் அதற்குரிய அறிகுறியே
தெரியவில்லையே.இதுவரை ஆயிரக்கணக்கானோர் ஒய்வு பெற்றுவிட்டனர், cps மூலம் கட்டிய பணமும் வரவில்லை. கருவூலகத்தில் கேட்டால் பதில் கூட தரமறுக்கிறார்கள்,
நாங்கள்கடுமையாக உழைத்துக்கட்டிய பணம் என்ன ஆயிற்று? அரசும்சரி, அதிகாரிகளும் வாய் மூடி மவுனம் சாதிக்கிறார்கள்,
தகவல் அறியும்உரிமைச்சட்டத்தில் கேட்டால் சம்பந்தமில்லாமல் ஏதாவது ஒருபதிலைக்கூறி சமாளிக்கிறார்கள்,
எதிர்கட்சிகள்,சங்கங்கள் இதுகுறித்து பெயருக்கு கேள்வி கேட்டு தங்களது கடமை முடிந்ததாக செயல்படுகின்றனர்.
எந்தவிதமான பலனும்இல்லாமல் வாழ்க்கையின் அன்றாட செலவினங்களுக்கே அவதிப்படும் நிலை இவர்களுக்குத்தெரியுமா?
"ஏழைஅழுத கண்ணீர் கூறிய வாளை ஒக்கும்".
இதற்கு சம்பந்தப்பட்டவர்கள் பதில் சொல்லும்காலம் விரைவில் வரும்.
நாங்கள் ஒன்றும் இலவசமாக உங்களிடம் கேட்கவில்லை, நாங்கள் உழைத்துக்கட்டிய பணத்தைத்தான் கேட்கிறோம்.
என்ன அநியாயம்! வாய்மூடி மவுனமாக இருப்பவர்களே!
"இன்றுஎங்களுக்கு, நாளை உங்களுக்கு ".!!மறந்து விடவேண்டாம்.நன்றி வருத்தத்துடன்......

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...