திராட்சையில் பல வகை இருக்கின்றன. ஆனால், அதிக இனிப்புள்ள திராட்சை மட்டுமே, உலர் திராட்சை தயாரிப்பதற்கு ஏற்றதாகும். இந்த உலர் திராட்சையைத் தயாரித்து, உணவில் உபயோகிக்கும் பழக்கம் 1490ஆம் ஆண்டிலேயே இருந்திருக்கிறது. கிரேக்கர்களும் ரோமானியர்களும் உலர் திராட்சையை உணவில் அதிகம் பயன்படுத்தி வந்திருக்கிறார்கள்.
உலகம் முழுவதும் உலர் திராட்சை தயாரிக்கப்படுகிறது. ஆனால், உலகம் முழுவதிலும் உற்பத்தியாகும் மொத்த உலர் திராட்சையில் பாதி அளவு அமெரிக்காவிலுள்ள, கலிபோர்னியா மாகாணத்தில் தயார் ஆகிறது. இத்தாலி, பிரான்ஸ், ஸ்பெயின், துருக்கி, ஈரான், ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளிலும் உலர் திராட்சை அதிகம் தயாராகிறது.
திராட்சையை காயவைக்கும்போது தண்ணீர்ச்சத்து நீங்கி, உலர்ந்து உலர் திராட்சையாக ஆகும்போது அதிலிருக்கும் சத்துகளும் போய்விடுமல்லவா என்ற கேள்வி பலருக்குள் ஏற்படுவதுண்டு. ஆனால், சத்துகள் நீங்குவதில்லை என்பதே உண்மை. சர்க்கரையை அதிகமாக உபயோகப்படுத்தி தயாரிக்கப்படும் இனிப்புப் பண்டங்களைவிட, உலர் திராட்சை சேர்த்து தயாரிக்கப்படும் உணவு உடலுக்கு மிக மிக நல்லது.
100 கிராம் எடையுள்ள ஒரு பாக்கெட்டில் சுமார் 200 உலர் திராட்சைகள் இருக்கும். இதில் 308 கலோரி இருக்கிறது. கொழுப்புச் சத்து அறவே கிடையாது. புரதச்சத்து சுமார் மூன்று கிராமும், கார்போஹைட்ரேட் 34 கிராமும், சர்க்கரைச் சத்து 26 கிராமும் இருக்கிறது. கார்போஹைட்ரேட்டும் சர்க்கரைச் சத்தும் உடனடியாக உடலுக்குச் சக்தி கொடுக்கும். 1.6 கிராம் கரையக்கூடிய நார்ச்சத்து இதில் இருப்பதால் கொழுப்பைக் குறைக்கவும், ரத்தத்தில் உள்ள சர்க்கரையை கட்டுப்பாட்டில் வைக்கவும் பயன்படுகிறது.
ஆர்ஜினின் என்று சொல்லக்கூடிய ஒருவகை அமினோ அமிலமும் உலர் திராட்சையில் இருக்கிறது. இது உடலுறவு சக்தியை மேம்படுத்தும். ஆண்களுக்கு அதிக சக்தியைக் கொடுக்கும். திருமணமான தம்பதியருக்கு முதலிரவில் பசும்பாலில் உலர் திராட்சையைப் போட்டு காய்ச்சிக் கொடுக்கும் பழக்கத்துக்கு உண்மையான காரணம் இதுதான்.
ஒரு டம்ளர் குடி தண்ணீரில், இரண்டு டீஸ்பூன் அளவு உலர் திராட்சையை முதல்நாள் இரவு முழுக்க ஊற வைத்து, மறுநாள் காலை அந்த தண்ணீரையும் ஊறிய உலர் திராட்சையையும் சாப்பிட்டால் மலச்சிக்கல் நீங்கும். முக்கியமாக பள்ளி குழந்தைகளுக்கு இம்முறையைப் பின்பற்றலாம். உடல் எடை மிகவும் குறைந்து, மெலிந்து இருப்பவர்கள், உடல் எடையைக் கூட்ட தினமும் அதிக அளவில் உலர் திராட்சைகளை அப்படியே சாப்பிட்டு வரலாம். கண்பார்வையை மேம்படுத்தும் வைட்டமின் சத்தும் இதில் இருப்பதால் கண்பார்வையை மேம்படுத்தும். பற்சொத்தை, பல்லில் ஓட்டையைக் கட்டுப்படுத்தும். இளம் பெண்களுக்குச் சருமத்தில் புது செல்களை உருவாக்கி பளபளப்பை தரும் ஆற்றல் கொண்டது உலர் திராட்சை.
ஐரோப்பிய நாடுகளில் நோய்வாய்ப்பட்டு படுக்கையில் இருப்பவர்களுக்கு மருத்துவ சிகிச்சை முடிந்த பின்பு உலர் திராட்சையை கிட்டத்தட்ட ஒருமாதம் சாப்பிடச் சொல்வார்கள். இந்த சிகிச்சைக்குப் பின்பு அவர்கள் உற்சாகமடைந்து சுறுசுறுப்பாக இயங்கத் தொடங்கிவிடுவார்கள். இது இன்றளவிலும் நடைமுறையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.