மும்பை, பெங்களூரு, டெல்லி போன்ற பெருநகரங்களில் மட்டுமல்லாது தற்போது சென்னையில் உள்ள பெண்களிடமும் மது பழக்கம் அதிகரித்து வருகிறது. அதற்கு உதாரணம்தான், சமீபத்தில் சென்னை திருவான்மியூரில் கடந்த வாரத்தில் அதிகாலை நேரத்தில் ஐஸ்வர்யா என்ற பெண் மது போதையில் ஓட்டி வந்த சொகுசு கார்
மோதியதில் முனுசாமி என்ற கூலித் தொழிலாளி பரிதாபமாக இறந்தார். மது போதையில் விபத்தை ஏற்படுத்திய வழக்கில் ஐஸ்வர்யா சிறையில் இருக்கும் நிலையில், ஐடி நிறுவனங்களில் பணிபுரியும் பெண்களிடம் மதுப்பழக்கம் அதிகமாக பரவ ஆரம்பித்துள்ளது என எச்சரிக்கிறார்கள் கல்வியாளர்கள், மருத்துவர்கள் மற்றும் குடிநோய் ஒழிப்பு மையத்தினர்.
இந்தியாவில் ‘டெட்ராயிட் சிட்டி’ என்கிறார்கள், சென்னையை. இந்தியாவில் தனியார் தாராளமயம் அறிமுகமானபோது பன்னாட்டு நிறுவனங்களின் முதலீட்டை ஈர்ப்பதற்கான வாய்ப்புகளும் வசதிகளும் இந்தியாவில் எல்லா நகரங்களிலும் இருந்தபோதிலும் சென்னை கட்டுமான ரீதியாக கார்ப்பரேட் முதலீடுகளை ஈர்ப்பதோடு தமிழகத்தில் ஆங்கிலம் தெரிந்த மத்திய தர வர்க்கம் ஒன்று ஐடி துறைக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாக இருந்தது. இந்தியாவிலேயே அதிக அளவிலான முதலீடுகள் சென்னையிலும் சென்னையைச் சுற்றிய பகுதிகளிலும் வந்து குவிந்ததும் அது மிகப் பெரிய அளவில் வெற்றியை ஈட்டிக் கொடுத்ததும் அதனால்தான்.
அது உழைப்பு ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் சமூகத்தில் பல நல்ல பலன்களைக் கொடுத்தாலும்கூட கலாச்சார ரீதியிலான சில சீரழிவுகளையும் கொண்டு வந்தது. ‘வீக் எண்ட் பார்ட்டி’ அல்லது ‘டிஸ்கொதே’ எனப்படும் வார இறுதி கொண்டாட்டங்கள், மாதத்தில் குறிப்பிட்ட நாட்களில் நகரின் மையத்தில் உள்ள நட்சத்திர அந்தஸ்து பெற்ற சில முக்கிய ஹோட்டல்களில் ஆண், பெண் பேதமின்றிகூடி மது அருந்துகிறார்கள். அவர்களில் 10-க்கு ஏழு பேர் ஐடி நிறுவனத்தில் பணிபுரிபவர்கள்தான். மீதி மூன்று பேரும் சமூகத்தில் உயர் அந்தஸ்தில் உள்ளவர்கள் என கூறப்படுகிறது.
பிபிஓ கம்பெனியில் பணிபுரியும் இளைஞர் ஒருவர்,
“நான் ஐடி துறைக்கு வந்து 15 ஆண்டுகள் ஆகப்போகிறது ஆரம்பத்தில் சிறிய அளவில் நடந்த பார்ட்டிகள் சில வருடங்களுக்குள்ளேயே மிகப் பெரிய விஷயங்களாக வளர்ச்சி அடைந்தது. வட நாட்டுப் பணியாளர்கள், வெளிநாட்டு பெண்கள் மட்டுமே முதலில் சகஜமாக இதில் ஈடுபட்டார்கள். பின்னர் நம்மூர் பெண்களும் இதில் ஈடுபட்டு இந்த பார்ட்டிகளையே வாரந்தோறும் பழக்கப்படுத்திக் கொண்டார்கள். சில நிறுவனங்களே தங்கள் ஊழியர்களில் சிறந்த பணியாளர்களுக்கு வாரா வாரம் பார்ட்டி கொடுக்கிறது. இப்படி பார்ட்டிக்குச் செல்கிறவர்கள் செல்லும்போது பாதுகாப்பாகச் சென்று விடுகிறார்கள். ஆனால், திரும்பி வரும்போது அவர்களின் வாழ்க்கை பெரும்பாலும் கேள்விக்குறியாகி விடுகிறது” என்கிறார் தரமணி ஐடி நிறுவனம் ஒன்றில் பணி செய்யும் சுந்தர்.
பெண்கள் மது அருந்தும் பழக்கம் பற்றி மருத்துவத்துறை பேராசிரியர் ஒருவர் கூறும்போது, ‘‘பொதுவாக பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜென் (OESTROGEN) என்ற ஹார்மோனும், ஆண்களுக்கு ஆண்ட்ரோஜென் (ANDROGEN) என்ற ஹார்மோனும் சுரப்பதைப் பொறுத்து பெண் தன்மையும், ஆண் தன்மையும் கூடும். நம் உணவு முறை மாற்றத்தால் பெண்களுக்கு அவர்களுக்கான ஹார்மோன் தன்மை குறைந்து ஆண்களுக்கான தன்மை கூடுதலாக தூண்டப்படுகிறது. அது கூடக்கூட ஆண்கள் செய்யக்கூடிய விஷயத்தை தாம் செய்தால் என்ன என்ற மனோபாவம் அதிகரித்து வருகிறது. அதில் ஒன்றுதான் மது அருந்தினால் என்ன? என்ற மனப்பான்மை’’ என்றார்.
இதுகுறித்து சென்னை, இந்திரா நகரில் உள்ள டி.டி.கே. மருத்துவமனையைச் சேர்ந்த டாக்டர்அனிதாராவ் மேலும் விளக்குகிறார். “ஆரம்பத்தில் வெறும் ஆசை, நண்பர்களின் வற்புறுத்தலுக்காக மது அருந்துவார்கள்; பின்பு அதில் தொடர்ந்து நாட்டம் ஏற்பட்டு குடிக்க ஆரம்பிக்கிறார்கள். நாளடைவில், இன்னும் அதிக அளவில் குடித்தால்தான் போதை ஏற்படும் என்கிற நிலை உருவாகும். எங்கே, எப்படிக் குடிக்கலாம் என்று மதுவைப் பற்றிய சிந்தனைதான் அதிகமாக இருக்கும். இவையே ஆரம்பக்கட்ட நிலை. குடிநோயாளிகளுக்கு குடிப்பது மட்டும்தான் ஒரே நோக்கமாக இருக்கும். குடிப்பதற்காக ஏதாவது ஒரு காரணத்தை அவர்களே உருவாக்கிக்கொள்வார்கள். பர்த் டே என்றால் பார்ட்டி, பதவி உயர்வு என்றால் பார்ட்டி, புது சட்டை போட்டால் பார்ட்டி, இந்தியா ஜெயிச்சாலும் பார்ட்டி, தோற்றாலும் பார்ட்டி என அவர்களுக்குத் தேவை ஏதேனும் ஒரு காரணம் மட்டுமே.
ஏழை, பணக்காரர் என்ற பாகுபாடே இல்லாமல் குடிப்பவர்களில் யாருக்கு வேண்டுமானாலும் குடிநோய் வரலாம். குடிப்பவர்களில் 10 முதல் 20 சதவிகிதத்தினர் மதுவுக்கு அடிமையாகி விடுகின்றனர். ரத்தத்தில் 20 மில்லி கிராம் ஆல்கஹால் கலந்தாலே பார்வைத் திறன் குறையும். 30 மில்லி கிராம் என்ற அளவைத் தொட்டால் தசை தன் கட்டுப்பாட்டை இழக்கும்.
சிந்திப்பது, புரிந்துகொள்வது, மதிப்பிடும் தன்மை குறைவது என்று சங்கிலித் தொடர்போல் எல்லாம் பாதிக்கப்படும். உடல் அளவிலும் மன அளவிலும் குடிக்கு அடிமையாகி விடுவதால் வாழ்க்கையில் பலவிதமான பிரச்னைகள் ஏற்பட்டாலும்கூட குடிப்பதை அவர்களால் நிறுத்த முடியாது. ஏனெனில், குடியை நிறுத்தும்போது கை நடுக்கம், தூக்கமின்மை, மனச்சோர்வு, சிந்திக்கும் திறனில் பாதிப்பு, பயம், பிரமை, நரம்புத் தளர்ச்சி, உணர்ச்சியின்மை என்று பல்வேறு பாதிப்புகள் உருவாகும். கணையத்தில் ரணம், தோல் தொடர்பான வியாதிகள், தாம்பத்திய வாழ்க்கையில் பிரச்னை, ஊட்டச்சத்துக் குறைபாடு, வயிற்றுப்புண், ஜீரணசக்தி குறைதல், புற்றுநோய் அபாயம், கல்லீரல் வீக்கம், மஞ்சள்காமாலை, இதயத் துடிப்பில் மாற்றம், ரத்தக் குழாய்கள் பாதிப்பு, இதய தசைகள் பழுதடைதல் என்று உடலின் எந்த உறுப்பையும் இந்தக் குடிநோய் விட்டுவைக்காது. குடித்தவுடன் மூளை செயல்படும் திறனும் உடனடியாகக் குறைவதோடு நிரந்தரப் பாதிப்புகளுக்கும் உள்ளாகும். மதுவின் தாக்கத்தில் கார் அல்லது பைக் ஓட்டுகிறவர் தாறுமாறாக வாகனம் ஓட்டி விபத்துக்குள்ளாக இதுவே காரணம்'' என்கிறவர், தொடர்ந்து, “குடியால் பாதிக்கப்பட்டவர்கள், குடிக்கும் நேரம் வரும்போது மனதை ஒருநிலைப்படுத்தும் வகையில் தியானம்,
பிரார்த்தனை அல்லது மனதை மாற்றும் வகையில் குடும்ப உறுப்பினர்களுடன் நேரத்தைச் செலவிடுவது, பொது இடங்களுக்குச் செல்வது, விளையாட்டுகளில் ஈடுபடுவது போன்ற செயல்களில் ஈடுபடலாம். ஆரோக்கியமான பொழுதுபோக்குகளையும் நல்ல நண்பர்களின் நட்பையும் உருவாக்கிக் கொள்ளலாம். எந்தச் சூழலில், யார் குடிக்கக் கூப்பிட்டாலும், மதுவை அருந்தக் கொடுத்தாலும் 'வேண்டாம்’ என்ற திடமான நம்பிக்கை இருந்தால் போதும். மதுவுக்கு ஒரு முற்றுபுள்ளி வைக்கலாம்” என்றார்.
இது மருத்துவர்கள் தரும் குறிப்பு. இன்னொரு பக்கம் ஆண்கள் குடிக்கும்போது பெண்களுக்கு குடிக்கும் உரிமை இல்லையா என்ற கேள்வியும் ஒரு பக்கம் எழுந்து வருகிறது. குடி, ஆண் - பெண் என் யார் குடித்தாலும் கேடுதான். அது ஆண்களை மட்டும் பாதிக்கும்; பெண்களைப் பாதிக்காது என்பது அல்ல. ஆண்களைவிட உடல் ரீதியாக பெண்கள் எதிர்கொள்ளும் இயற்கை உபாதைகள் அதிகம் என்னும்போது, ஆண்களை விட மது அருந்துவதால் பெண்களுக்கு ஏற்படும் தீங்குகளும் அதிகம். பண்பாட்டின் பெயராலும் அலுவலக கலாச்சாரம் என்னும் பெயரிலும் நடக்கும் வீக் எண்ட் பார்ட்டிகளில் இருந்து விலகி இருக்கும் பெண்களும் உண்டு.