டி.பார்ம். படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்...!

தமிழகத்தில் டி.பார்ம், போஸ்ட் பிஎஸ்சி படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்று மருத்துவக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.
செவிலியர் பட்டயப்படிப்பு முடித்தவர்களுக்கான போஸ்ட் பி.எஸ்சி., டி.பார்ம், ஏற்கெனவே டி.பார்ம் முடித்தவர்களுக்கான பி.பார்ம் (lateral entry) ஆகிய படிப்புகளுக்கான
விண்ணப்பங்களை (ஜூலை 11 முதல்) பதிவிறக்கம் செய்யலாம்.
தமிழக அரசின் www.tn.gov.in என்ற இணையதளத்திலும், தமிழக சுகாதாரத் துறையின் www.tnhealth.org என்ற இணையதளத்திலும் இந்த 3 படிப்புகளுக்கான விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். நேரடி விண்ணப்ப விநியோகம் கிடையாது.
விண்ணப்பங்களை ஜூலை 21-ஆம் தேதி வரை பதிவிறக்கம் செய்யலாம்.


பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்வி தேர்வுக் குழுவுக்கு சென்று சேர வேண்டிய கடைசி நாள் ஜூலை 22 ஆகும்.
இந்தப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் ஜூலை 4-ஆம் வாரத்தில் வெளியிடப்பட்டு, ஆகஸ்ட் 2-ஆம் வாரத்தில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று தேர்வுக் குழு அதிகாரிகள் தெரிவித்தனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...