அண்ணா பல்கலைக்கழகத் துறைகளில் படிக்கும் மாணவர்களில் 60 சதவீதத்தினருக்கே வளாகத் தேர்வு மூலம் வேலைவாய்ப்பு கிடைக்கும் நிலையில், 100 சதவீத வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாக சுயநிதிப் பொறியியல் கல்லூரிகள் கூறுவது: எப்படிச் சாத்தியமாகும் எனக் கேள்வி
எழுப்புகின்றனர் பேராசிரியர்கள்.
தமிழ்நாடு பொறியியல் சேர்க்கையைப் பொருத்தவரை, அண்ணா பல்கலைக்கழகத் துறைகளான கிண்டி பொறியியல் கல்லூரி, அழகப்பா தொழில்நுட்பக் கல்லூரி, எம்.ஐ.டி. ஆகிய மூன்று கல்லூரிகளுக்கே அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் முன்னுரிமை அளிப்பர்.
தகுதி வாய்ந்த பேராசிரியர்கள் உரிய எண்ணிக்கையில் பணியமர்த்தப்பட்டிருப்பதும், நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய ஆய்வகங்கள், இலவச ஆங்கில மொழிப் பயிற்சி, சுயதிறன் மேம்பாட்டு பயிற்சி, தொழில் நிறுவனப் பயிற்சி, வளாகத் தேர்வு மூலம் சிறந்த பணி வாய்ப்பு என அனைத்து வகையான வசதிகளும் கிடைப்பதே இந்த மூன்று கல்லூரிகளுக்கும் மாணவர்கள் முன்னுரிமை அளிப்பதற்கான காரணம்.

இவ்வாறு உள்கட்டமைப்பு வசதிகள் முழுமையாக நிறைந்திருக்கும் இந்த மூன்று கல்லூரிகளிலும் ஒவ்வோர் ஆண்டும் 3 ஆயிரம் மாணவர்கள் சேருகின்றனர். இவர்களில் ஆண்டுதோறும் சராசரியாக 1,750 பேரே வளாக நேர்காணல் மூலம் வேலைவாய்ப்பைப் பெறுகின்றனர்.
2014-15 ஆம் கல்வியாண்டில் இந்த மூன்று கல்லூரி மாணவர்களுக்காக நடத்தப்பட்ட வளாக நேர்காணலில் 1,800 பேர் பணி வாய்ப்பைப் பெற்றுள்ளனர். 2015-16 ஆம் கல்வியாண்டில் இந்த எண்ணிக்கை 1,714-ஆகக் குறைந்திருக்கிறது. மைக்ரோசாஃப்ட், ஃபிளிப்கார்ட் போன்ற முன்னணி நிறுவனங்கள் இந்த மூன்று கல்லூரிகளிலும் ஒற்றை இலக்கத்திலேயே மாணவர்களை பணிக்காகத் தேர்வு செய்திருக்கின்றன. அதாவது, ஒவ்வோர் ஆண்டும் 60 சதவீத மாணவர்களே வளாகத் தேர்வு மூலம் பணி வாய்ப்பைப் பெறுகின்றனர்.
உள்கட்டமைப்பு வசதிகள் முழுமை பெற்றிருக்கும் பல்கலைக்கழகத் துறைகளிலேயே இந்த நிலை இருக்கிற போது, சுயநிதிப் பொறியியல் கல்லூரிகளில் 100 சதவீத வேலைவாய்ப்பு என்பது எப்படிச் சாத்தியப்படும் எனக் கேள்வி எழுப்புகின்றனர் அண்ணா பல்கலைக்கழகப் பேராசிரியர்கள்.
வேலைக்காகக் காத்திருக்கும் 4.71 லட்சம் பேர்:
மேலும், ஒவ்வோர் ஆண்டும் தமிழகம் முழுவதும் உள்ள 530 பொறியியல் கல்லூரிகளிலிருந்து 1.9 லட்சம் மாணவர்கள் படிப்பை முடித்து வெளிவருகின்றனர். இவர்களில் 40 சதவீதத்துக்கும் குறைவானவர்களே உரிய வேலைவாய்ப்பைப் பெறுவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழக அரசு அண்மையில் வெளியிட்ட 2016, மார்ச் 31-ஆம் தேதி வரையிலான வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு விவரங்களின்படி, 2,39,950 இளநிலைப் பொறியியல் பட்டதாரிகள் வேலைவாய்ப்புக்காக பதிவு செய்து காத்திருக்கின்றனர்.
இதேபோல, முதுநிலைப் பொறியியல் பட்டதாரிகள் 2,31,062 பேர் வேலைவாய்ப்புக்காகக் காத்திருக்கின்றனர் என்பதும் தெரிய வந்துள்ளது.
எனவே, மாணவர்களைக் கவர்வதற்காகவே வெளியிடப்படும் சில சுயநிதிப் பொறியியல் கல்லூரிகளின் விளம்பரங்களை நம்பாமல், முன்னாள் மாணவர்களிடம் விசாரித்து கல்லூரிகளைத் தேர்வு செய்வதோடு, வேலைவாய்ப்புக்கான தகுதியை வளர்த்துக் கொள்வதன் மூலமே பொறியியல் பட்டதாரிகள் பணி வாய்ப்பைப் பெற முடியும் என்கின்றனர் பேராசிரியர்கள்.
பாடத் திட்டத்தில் மாற்றம்
வேலைவாய்ப்புக்கு ஏற்ப பொறியியல் மாணவர்களின் திறனை மேம்படுத்துவதற்காக, பாடத் திட்டத்திலேயே அண்ணா பல்கலைக்கழகம் மாற்றத்தைக் கொண்டுவந்துள்ளது.
இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழகப் பதிவாளர் கணேசன், கல்வித் திட்ட இயக்குநர் டி.வி. கீதா ஆகியோர் கூறியதாவது:
அண்ணா பல்கலைக்கழகத்தின் மூன்று துறைகளில் படிக்கும் மாணவர்களுக்கு வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்த பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இதேபோல, பல்கலைக்கழகத்தின் இணைப்புக் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களும் பயன்பெறும் வகையில், பாடத் திட்டத்திலேயே மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.
அதாவது, தகவல்தொடர்புத் திறன் மேம்பாடு, பொறியியல் அறிவுத் திறன் சோதனை, புதிய கண்டுபிடிப்புக்கான திட்டம் உள்ளிட்ட புதிய பகுதிகள் 2014-15 முதல் பாடத் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.
இதில் மேலும் மாற்றத்தைக் கொண்டு வரவும் பல்கலைக்கழகம் திட்டமிட்டிருக்கிறது என்றனர் அவர்கள்.
நிறுவனங்கள் எதிர்பார்ப்பது என்ன?
தகவல் தொழில்நுட்ப (ஐடி) நிறுவனங்களும், ஆட்டோமொபைல், அதைச் சார்ந்த இணை நிறுவனங்களும் வெவ்வேறுவிதமான எதிர்பார்ப்புகளுடன் வளாக நேர்காணல் மூலம் மாணவர்களைத் தேர்வு செய்ய வருவதாக அண்ணா பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழகத்தின் பல்கலைக்கழக - தொழில் நிறுவன இணைப்பு மையத்தின் (சி.யு.ஐ.சி.) இயக்குநர் டி.தியாகராஜன் கூறியதாவது:
வளாக நேர்காணல் மூலம் மாணவர்களைத் தேர்ந்தெடுக்க வரும் அனைத்து நிறுவனங்களும் முதலில் எதிர்பார்ப்பது, பி.இ. மாணவர்கள் 8 பருவத் தேர்வுகளிலும் "அரியர்' இல்லாமல் தேர்ச்சி பெற்றிருப்பதோடு, குறைந்தபட்சம் 7 சி.ஜி.பி.ஏ. (ஒருங்கிணைந்த சராசரி மதிப்பெண் புள்ளி) புள்ளிகள் பெற்றிருக்க வேண்டும் என்பதுதான்.
அடுத்ததாக, தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களைப் பொருத்தவரை, ஆங்கில புலமையுடன் கூடிய தகவல் தொடர்புத் திறன், குழு விவாதத் திறன் ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளிக்கின்றன. அதன்பிறகு, தேர்வுக்குப் பின்னர் அந்தந்த நிறுவனங்கள் சார்பில் வழங்கப்படும் பயிற்சியில் திறம்படச் செயல்படுகிற அளவுக்கு மென்பொருள் திறனை மாணவர் பெற்றிருக்கிறாரா என்பதை சோதிப்பர்.
ஆட்டோமொபைல் நிறுவனங்களைப் பொருத்தவரை, மாணவரின் தொழில்நுட்பத் திறனுக்குத்தான் முன்னுரிமை அளிப்பர்.
சில முன்னணி நிறுவனங்கள், பத்தாம் வகுப்பு முதல் தோல்வியே இன்றி தேர்ச்சி பெற்று, 70 சதவீதத்துக்கு மேல் மதிப்பெண்கள் பெற்றிருப்பவர்களையே வளாக நேர்காணலுக்கு அனுமதிக்கின்றன.
எனவே, மாணவர்கள் எந்தப் பணிக்குச் செல்லப்போகிறோம் எனபதை முதலில் தீர்மானித்துவிட்டு, அதற்கேற்றவாறு பயிற்சிகளை மேற்கொள்வது சிறப்பாக இருக்கும்.
இதேபோல, மாணவர்கள் திறனை வளர்த்துக் கொள்வதற்கு ஏதுவாக, சிறிய கையேடு ஒன்றையும் அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. அதில், தொழில்நுட்பத் திறனை மேம்படுத்துவதற்கான பயிற்சி, நேர்முகத் தேர்வுக்கான பயிற்சிகளை எந்தெந்த இணையதளங்கள் மூலம் பெற முடியும், ஆங்கிலத் தகவல் தொடர்புத் திறனை வளர்த்துக்கொள்ள உதவும் இணையதள முகவரிகள் எனப் பல்வேறு தகவல்கள் இடம் பெற்றுள்ளன. இந்தக் கையேடு அண்ணா பல்கலைக்கழக இணையதளத்திலும் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கிறது என்றார் அவர்.