டில்லி கல்லூரியை ஆக்கிரமித்த தமிழக மாணவர்கள்!

 டில்லியில் உள்ள ஸ்ரீராம் வணிகவியல் கல்லூரியில் சேர்ந்த மாணவர்களில் 75 முதல் 80 சதவீதம் வரை தமிழகத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

வணிகவியல் படிப்பில் இந்தியாவில் மிகவும் புகழ்பெற்றது ஸ்ரீராம் வணிகவியல் கல்லூரி. பிகாம் (ஹானர்ஸ்) மற்றும் பி.ஏ.,
பொருளாதாரத்தில் சேர கட் ஆப் மதிப்பெண்கள் 98 சதவீதம் மற்றும் 98.25 சதவீதம் ஆகும்.

மாணவர் சேர்க்கை செயலாளர் அனில்குமார் கூறியதாவது: கல்லூரியில் தமிழகத்தை சேர்ந்த 75 முதல் 80 சதவீத மாணவர்கள் சேர்ந்துள்ளனர். இதற்கு அடுத்தபடியாக கேரளாவை சேர்ந்தவர்கள் சேர்ந்துள்ளனர். தமிழக பள்ளி கல்வியில் படித்தவர்கள், 99 சதவீதத்திற்கு மேல் அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். இதனால் தமிழகத்தை சேர்ந்தவர்கள் அதிகளவில் போட்டியில் இருப்பதில் ஆச்சர்யம் ஒன்றுமில்லை. மேல்படிப்புக்கு டில்லி சிறந்தது என தமிழக மாணவர்கள் நினைத்தது மகிழ்ச்சியளிக்கிறது எனக்கூறினார்.

கடந்த வெள்ளிக்கிழமை வரை 339 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள் பெரும்பாலானவர்கள், பிகாம்(எச்) படிப்பில் இணைந்துள்ளனர். ஒரே மாநிலத்தை சேர்ந்தவர்கள் அதிகளவில் இதுபோல் எப்போதும் இணைந்தது இல்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.

கல்லூரியில் இணைந்த மாணவர்களின் கேரளாவை சேர்ந்த எலிசபெத் தோமஸ் என்பவர் அதிக மதிப்பெண் பெற்றுள்ளார். இங்கு முதல் இரண்டு நாளில் கேரளாவை சேர்ந்தவர்களும் அதிக அளவில் இணைந்துள்ளனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...