படித்த இளைஞர்களுக்கு நிதி உதவி பயன்படுத்த கலெக்டர் வேண்டுகோள்!

வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து , எந்த வேலை வாய்ப்பும் கிடைக்காத, படித்த இளைஞர்கள், தமிழக அரசு மாதந்தோறும் வழங்கும் உதவித்தொகையை பெற்று பயனடையலாம்.


கலெக்டர் (பொறுப்பு) கிறிஸ்துராஜ் இது குறித்து, வெளியிட்டுள்ள அறிக்கை:

அரசு உத்தரவுப்படி, வேலைவாய்ப்பு அலுவலகங்களில், பத்தாம் வகுப்பு தோல்வியடைந்தவர்களுக்கு, நுாறு ரூபாயும், தேர்ச்சி பெற்றவர்களுக்கு, நுாற்றைம்பது ரூபாயும், பிளஸ் 2 படித்தவர்களுக்கு, 200 ரூபாயும், பட்டதாரி மற்றும் முதுநிலை பட்டதாரிகளுக்கு, 300 ரூபாயும் வழங்கும் திட்டம் அமலில் உள்ளது.

இந்த உதவித்தொகை பெறுபவர்கள், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், பதிவு செய்து, ஐந்தாண்டுகளுக்கு மேல் காத்திருப்பவர்களாக இருக்க வேண்டும். இவர்களது குடும்ப ஆண்டு வருவாய், 50 ஆயிரம் ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும்.

பள்ளி மற்றும் கல்லுாரி படிப்பை, தமிழகத்திலேயே முடித்து இங்கேயே வசிப்பவராகவும், வேலை இல்லாதவராகவும் இருக்க வேண்டும். மனுதாரர் வேலைவாய்ப்பு பதிவை, தொடர்ந்து புதுப்பிப்பவராக இருக்க வேண்டும்.

உதவித்தொகை பெற்று வரும் பயனாளிகள், வங்கிக்கணக்கு புத்தக நகல் மற்றும் வேலைவாய்ப்பு பதிவு அட்டை நகலை நேரிலோ, தபால் வாயிலாகவோ அனுப்பி, உதவித்தொகையை பெற்றுக்கொள்ளலாம்.

இதற்கான விண்ணப்பங்களை, மேட்டுப்பாளையம் ரோட்டிலுள்ள, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...