அந்த பரபரப்பு நிமிடங்கள்...!

ஜூலை 1-ஆம் தேதி இரவு மேன்ஷன் மேனேஜர் ராஜேந்திரன் காவல்துறைக்கு தகவல் கொடுத்திருக்கிறார். தகவல் கிடைத்த 15வது நிமிடத்தில் காவல்துறையினர் இடத்திற்கு வந்துள்ளனர். துணை ஆணையர் தேவராஜ், இன்ஸ்பெக்டர் சிவானந்தபாரதி, மதியழகன், ஜே.சி.சங்கர் ஆகியோர் அடங்கிய டீம் மேன்ஷனுக்கு உள்ளே சென்றுள்ளனர். இன்ஸ்பெக்டர் கருணா டீம்
மேன்ஷனுக்கு வெளியில் ரவுண்ட் அப் செய்துள்ளனர். ஊடகங்கள் உட்பட யாரும் உள்ளே போக முடியாத அளவுக்கு பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. மேலும், அந்த ஏரியாவிலிருந்து கொலையாளி செல்போன் எண்ணுக்கு ஏதாவது கால், எஸ்.எம்.எஸ் செல்கிறதா என்றும் கவனமாக ஒரு தொழில்நுட்பக் குழுவும் கண்காணித்து வந்தது. அப்போதுதான், குற்றவாளிக்கு எஸ்.எம்.எஸ் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக இந்தத் தகவல் கமிஷனருக்கு சொல்லப்பட்டுள்ளது. பின்னர், நெல்லை எஸ்.பி-க்கு 'அலர்ட் மெசேஜ்' அனுப்பப்பட்டுள்ளது. உடனடியாக நெல்லை எஸ்.பி - டீம் ஸ்பாட்டுக்குச் சென்று, குற்றவாளி இருப்பதை உறுதிசெய்துள்ளனர். குற்றவாளி இருப்பதை உறுதி செய்தவுடன் மேலிடத்துக்கு தகவல் அனுப்பப்பட்டது. 'உடனே பிடிச்சுடுங்க' என்று பதில் வந்திருக்கிறது. பின்னர் கூடுதல் படையுடன் சென்று கைது செய்ய முயற்சிக்கும் போது, ராம்குமார் தப்பித்து ஓட முயற்சித்துள்ளார். அப்போது காவல்துறையினர், ' துப்பாக்கியால் சுட்டுடுவோம்' என்று மிரட்டியுள்ளனர். உடனே, ராம்குமார் தனது பாக்கெட்டில் தயாராக வைத்திருந்த பிளேடால் கழுத்தில் அறுத்துக்கொண்டு தற்கொலை செய்ய முயற்சித்துள்ளார். அவரை காவல்துறையினர் ஓடிச்சென்று தூக்கிக்கொண்டனர்.

மேன்ஷன் உள்ளே சென்ற டீம், கணேசனையும், இராஜேந்திரனையும் அழைத்துக்கொண்டு நுங்கம்பாக்கம் காவல் நிலையத்துக்கு

கொண்டுவந்திருக்கிறார்கள்.



இருவரிடமும் இணை ஆணையரும், துணை ஆணையரும் மாறி மாறி விசாரித்தார்கள். வெளியில் தெரியாத அளவுக்கு, செய்திகளை உடனுக்குடன் சென்னை பெருநகர கமிஷனருக்கு வாட்ஸ் ஆப்பில் அனுப்பியிருக்கிறார்கள்.

'கணேசனையும், இராஜேந்திரனையும், மீடியாவுக்கு தெரியாமல் வேறு இடத்துக்கு மாத்துங்க' என்று சொல்லியிருக்கிறார்கள். பின்னர், இன்று காலை 10 மணிக்கு இருவரையும் ஒரு ஜீப்பில் ஏற்றிக்கொண்டு, எழும்பூர் கன்னிமாரா நூலகம் அருகில் உள்ள மியூசியத்துக்கு உள்ளே இருக்கும் 'டம்மி காவல் நிலையத்துக்கு' அழைத்துச் சென்றிருக்கிறார்கள். அங்கு கமிஷனர் அவர்கள் இருவரையும் ரகசியமாக சந்தித்துள்ளார். பிறகுதான் கமிஷனர் பத்திரிகையாளர்களைச் சந்தித்துள்ளார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...