எப்போது பேசுவார் சுவாதி கொலையாளி ராம்குமார்...!

சுவாதியை கொலைசெய்த வழக்கில், தென்காசி அருகே உள்ள பண்பொழில் கிராமத்தைச்சேர்ந்த ராம்குமார் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது வீட்டுக்குச் சென்றபோது தப்ப முனைந்து, தன் கழுத்தை பிளேடால் அறுத்து தற்கொலைக்கு முயன்றிருக்கிறார்.


அப்போது போலீசாருடன் இணைந்து அவரைக் காப்பாற்றிய இதயத்துல்லா பேசும்போது, “ராம்குமார் மிகவும் அமைதியான பையன், யாரிடமும் அவ்வளவாக பேசமாட்டான். மற்ற இளைஞர்களோடு இணைந்து அரட்டை அடித்தோ, விளையாடியோகூட நான் பார்த்ததில்லை. படித்து முடித்துவிட்டு சென்னைக்குச் சென்ற அவன், சென்னையில் உள்ள ஒரு துணிக்கடையில் கடந்த 4 மாதங்களாக வேலை பார்த்துவந்தான். அவர்கள், அங்கு என்ன செய்கிறார்கள் என்று நமக்கு என்ன தெரியும்? இங்கே கிராமங்களில் எப்படிப் புழங்குகிறார்கள் என்பது மட்டும்தான் நமக்குத் தெரியும். அவனது தந்தை தொலைத்தொடர்பு நிறுவனத்தில் கேபிள் புதைக்கும் கடைநிலை ஊழியராக இருக்கிறார். அவனது இரு தங்கைகளும் இங்கு படித்துக் கொண்டிருக்கின்றனர். எங்களுக்கு இப்படி ஒரு தகவல் இடியாக வந்து இறங்கியிருப்பது வேதனையாக இருக்கிறது. ஏன், இதை அவன் செய்தான் என்பது தெரியவில்லை. நம்பவே முடியாமல் இருக்கிறது” என்கிறார் இதயத்துல்லா.

சுவாதி இறந்து இன்றோடு ஒன்பதாவது நாள். சுவாதியின் உடல் சென்னையில் தகனம் செய்யப்பட்டாலும் அவருக்கான ஈமச்சடங்குகளை திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் வடக்குவாசல் பகுதியில் உள்ள கொள்ளிடம் ஆற்றின் கரையில் இன்று, நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய 3 நாட்கள் செய்யத் திட்டமிட்டிருந்தார் சுவாதியின் அப்பா. இதற்காக, தன் உறவினர்களோடு அங்கு நேற்றே சென்றிருந்தார்.

சுவாதி கொலையில் ராம்குமார் கைது செய்யப்பட்ட செய்தி நள்ளிரவே அவருக்குச் சொல்லப்பட மிகவும் இறுக்கமாக இருந்துள்ளார். உறவினர்களைத் தவிர வேறு யாரிடமும் பேச்சுக் கொடுக்காமல் இருந்த சுவாதியின் தந்தை, ஊடகவியலாளர்கள் சென்று கருத்து கேட்டபோதும் எதுவும் பேச மறுத்துவிட்டார்.

இந்நிலையில், பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை முடித்து முழுமையாக மருத்துவர்களின் கண்காணிப்பில் இருக்கும் ராம்குமாருக்கு, இன்னும் நினைவு திரும்ப சில மணி நேரங்கள் ஆகும். அவரது கழுத்தில் ஆழமான காயம் ஏற்பட்டிருக்கிறது ஆனால், உயிரைப் பாதிக்கும் அளவுக்கு அது நரம்புகளை அறுக்கவில்லை. அந்த ஆழமான காயத்துக்கு ஆபரேஷன் செய்து, 18 தையல் போடப்பட்டு மயக்கநிலையில் முழு ஓய்வுடன் வைக்கப்பட்டுள்ளார். மயக்க மருந்து தெளிந்தபின்னரும் அவருக்கான சிகிச்சை தொடரும்.

இந்த வழக்கில், மிகப்பெரிய நெருக்கடியைச் சந்தித்த காவல்துறையினருக்கு முன்னால் இப்போதுள்ள மிகப்பெரிய நெருக்கடி அவரிடம் முதல்கட்ட வாக்குமூலத்தை வாங்கி நீதிமன்றத்தில் தாக்கல்செய்து எப்.ஐ.ஆர் பதிய வேண்டும் என்பதுதான். ஆனால், ராம்குமாரின் உடல்நிலை வாக்குமூலம் வாங்குமளவுக்கு உகந்ததாக இல்லை.

ராம்குமாரின் உடல்நிலை பற்றி நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி டீன் சித்தி அத்தியமுனவரா கூறுகையில், “ஆழமாக கழுத்து அறுபட்டாலும் நரம்புகள் பெரியளவில் சேதமடையாத காரணத்தால் உயிர் பிழைத்துள்ளார். சுமார் 1.30 மணியளவில் இங்கு கொண்டுவரப்பட்ட அவருக்கு அறுவை சிகிச்சை செய்துமுடித்துள்ளோம். அவர் உடல்நலம் தேறி வருகிறார் என்றாலும் முழுமையாக அவரது கழுத்துப்பகுதி குணமடைந்து அவர் பேச இன்னும் இரண்டு நாட்கள் ஆகும்” என்றார்.

இதனால், ராம்குமாரிடம் திருநெல்வேலி மாவட்ட மாஜிஸ்திரேட்டை வைத்து வாக்குமூலம் பெறும் முயற்சி பலிக்கவில்லை.

இந்தக் கொலைவழக்கு தொடர்பாக ஊடகங்களைச் சந்தித்த சென்னை கமிஷனர், கொலையாளியை கைது செய்துள்ளோம் என்றும், சுவாதியை சில நாட்கள் பின்தொடர்ந்திருக்கிறார் என்று மட்டுமே கூறினார். கொலைக்கான காரணங்கள் பற்றியோ, இந்தக் கொலையில் சிக்கியுள்ள முக்கிய ஆதாரங்கள்பற்றி நீதிமன்றத்தில் உரிய ஆவணங்களோடு தெரிவிப்பதில் முனைப்பாகவும் வேகமாகவும் இருக்கிறார்கள்.

ஆனால், ராம்குமார் இயல்புநிலைக்கு திரும்பும் முன்னர் புறரீதியான வேலைகளைச் செய்து முடிக்கின்றனர். இப்போது ராம்குமாரின் தந்தை, தாத்தா, சகோதரிகளை விசாரிக்கும் காவலர்கள் பண்பொழில் கிராமத்தில் உள்ள அவரது வீட்டை முழுமையாகச் சோதனை செய்து வருகிறார்கள். அதுபோல, ராம்குமார் சென்னை சூளைமேட்டில் தங்கியிருந்த ஏ.எஸ். மேன்ஷனை போலீசார் மூடிவைத்துள்ளனர். அதாவது, விசாரணை முடியும்வரை அந்த மேன்ஷனுக்குள் யாரும் நுழையவோ, வெளியில் செல்லவோ முடியாது. ராம்குமார் தங்கியிருந்த அறையை மட்டும் சீல் வைத்துள்ள போலீசார் அங்கிருந்து சில ஆதாரங்களை எடுத்துச் சென்றுள்ளனர். சுவாதி கொலை வழக்கில் தமிழக காவல்துறையின் மானம் காப்பாற்றப்பட்டிருக்கிறது. அடுத்தடுத்து, சுவாதி கொலையில் வெளிவரப்போகும் உண்மைகள், இனிமேல் இப்படியாக கொலைகள் நடைபெறாமல் இருப்பதற்கான முன்னுதாரணமாக இருக்கட்டும்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...