தனியார் பொறியியல், மருத்துவக் கல்லூரிகளின் அறக்கட்டளைகள் மூலம் வரி ஏய்ப்பு நடப்பதாக தொடரப்பட்ட வழக்கில் நான்கு வாரங்களில் பதிலளிக்க வருமான வரித்துறை மற்றும் சுகாதாரத்துறைக்கு உத்தரவிட்டுள்ளது. சென்னை
உயர்நீதிமன்றத்தில் ஜவகர் சண்முகம் என்பவர் தாக்கல் செய்த மனுவில், “தமிழகத்தில் தனியார் பொறியியல் மற்றும் மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்களிடம் வசூலிக்கப்படும் அதிக கட்டணங்கள், அறக்கட்டளைகள் மூலம் பதுக்கப்படுகிறது. தற்போது எஸ்ஆர்எம் அறக்கட்டளை மூலம், ரூ.150 கோடிக்கும் மேல் முறைகேடாக பெறப்பட்டுள்ளது. எனவே, இதுபோன்று முறைகேட்டில் ஈடுபடும் அறக்கட்டளைகளுக்கு வழங்கப்படும் சலுகைகளை ரத்து செய்ய வேண்டும்” என தெரிவித்தார்.
இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் மற்றும் நீதிபதி மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வுமுன் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், இது குறித்து வருமான வரிதுறை இயக்குநர் மற்றும் சுகாதாரத்துறை செயலர் ஆகியோர் ஆய்வு செய்து நான்கு வாரங்களில் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டனர். வழக்கின் விசாரணை ஆகஸ்ட் 22ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.