மத்திய அரசுக்கு எதிராக வேலை நிறுத்தம்!

செப்டம்பர் 2ஆம் தேதி நாடு தழுவிய வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக்கிட கடுமையாக உழைத்துக்கொண்டு உள்ளனர் மத்திய பொதுத்துறை ஊழியர் சங்கத்தினர். மத்திய அரசின் பொதுத்துறை சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம்
தெலங்கானா, ஹைதராபாத் நகரம் காந்திபவனில் நடைபெற்றது. இதில் இந்தியாவில் உள்ள மத்திய பொதுத்துறை சங்கங்களின் தலைவர்களும் சம்மேளன நிர்வாகிகளும் ஊழியர்களும் திரளாக கலந்து கொண்டனர்.

அக்கூட்டத்துக்கு சிஐடியு அகில இந்திய துணை பொதுச் செயலாளர் தேவ்ராய் தலைமை தாங்க, ஐஎன்டியுசி அகில இந்திய தலைவர் ஜி.சஞ்சீவிரெட்டி தொடக்க உரையாற்றினார். அவரது உரையில் மோடி அரசு பின்பற்றிவரும் கொள்கைகளினால் பொதுத்துறை நிறுவனங்கள் பாதிக்கப்படுவது குறித்தும் தொழிலாளர்களைப் பாதிக்கிற வகையில் தொழிலாளர் சட்டங்களைத் திருத்தும் போக்கையும் ஒப்பந்தத் தொழிலாளர் எண்ணிக்கை கூடுதல் ஆகிவரும் நிலையில் அவர்களது பணிநிலைமைகள் கடுமையாக பாதிக்கப்படுவது குறித்தும் பேசி, செப்டம்பர் 2ஆம் தேதி வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக்கிட வேண்டியது அவசியம் என்றார்.

சிஐடியு அகில இந்திய பொதுச் செயலாளர் தபன்சென் பேசியபோது,

‘மத்திய அரசானது பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பதற்கு திட்டமிடுதல் மட்டுமல்லாமல், நிதி ஆயோக் நேரடியாக தலையிட்டு, 74 பொதுத்துறை நிறுவனத்தின் பங்குகளை விற்பதோடு கொடூரமான முறையில் தனியார்மயமாக்கும் நடவடிக்கை எடுத்து வருகிறது. தொழிற்சங்க உரிமை பறிப்பு, தொழிலாளர் சட்டங்களை சீரழித்தல், பொதுத்துறை ஊழியர்களின் பணி நிலைகளை மாற்றி அமைத்தல், பொதுத்துறையின் நிர்வாகத்தில் தனியார் நிறுவனங்களின் அதிகாரிகளை அனுமதித்தல், ஒப்பந்தத் தொழிலாளர் முறையை ஒழித்து நிரந்தரப்படுத்துதல், ஊதியப் பேச்சுவார்த்தை தொடங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளின் பிரகடனத்தை வெளியிட்டு செப்டம்பர் 2ஆம் தேதி வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக்குவோம்’ என்றார்.

இதற்காக இப்போதே ஒவ்வொரு ஊழியர் சங்கங்களும் தங்கள் சங்க கூட்டங்களை தனிப்பட்ட முறையில் நடத்தத் தொடங்கியுள்ளன. துண்டறிக்கை, சுவரொட்டி, கருத்தரங்கம் என்ற வகையில் வேலை நிறுத்தத்துக்கான தயாரிப்புகளைத் தொடங்கி விட்டனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...