தொலைதூர பயணிகளுக்காக ‘அம்மா மோட்டல்’!

2011இல் தமிழக முதல்வராக ஜெயலலிதா பொறுப்பேற்றுக் கொண்டபோது அம்மா உணவகத்தை ஆரம்பித்தார். சென்னை மாநகராட்சியில் முதன்முதலாக அறிமுகம் ஆன இந்த திட்டம் வெற்றி அடைந்த நிலையில், தமிழகம் முழுக்க
விரிவுபடுத்தப்பட்டது. பின்னர் அம்மா உப்பு, அம்மா குடிநீர், அம்மா காய்கறி கடை என பல தளங்களில் இந்த திட்டங்கள் விரிவுபடுத்தப்பட்டன. அதனுடைய தொடர்ச்சியாக இப்போது தொலைதூரம் பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்காக ‘அம்மா மோட்டல்’ திட்டம் கொண்டு வரப்பட உள்ளது. பேருந்துகளில் தொலைதூரம் பயணம் செய்யும் பயணிகளுக்காக ஆங்காங்கே மோட்டல்கள் அமைக்கப்பட்டிருக்கிறது. தொலைதூரம் செல்லும் பேருந்துகள் இடையில் மோட்டல்களில் நிற்பது வழக்கம். இவ்வாறு பயண வழிகளில் அமைக்கப்பட்டிருக்கும் மோட்டல்களில் விற்கப்படும் உணவுப்பண்டங்களில் விலை அதிகமாகவும், தரமற்றதாகவும் இருக்கிறது. ஒரு சில மோட்டல்களில் தரமான உணவு கிடைத்தாலும் அது சாதாரண மக்கள் வாங்கமுடியாத அளவுக்கு அதிக விலை உள்ளதாக இருக்கிறது. இதுதொடர்பான தொலைதூரப் பயணிகளிடையே நீண்ட காலமாக அதிருப்தி நிலவி வந்த நிலையில், தமிழக அரசுக்குப் புகார்களும் வந்தன. இந்நிலையில் நெடுஞ்சாலைகளில் மோட்டல்களை உருவாக்கி, பேருந்து பயணிகளுக்கு குறைந்த விலையில், தரமான உணவு வழங்கலாமா? என்பது பற்றி அரசு அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர். அம்மா மோட்டல்களில் தரமான உணவு வழங்குவது மட்டுமின்றி சுகாதாரமான கழிப்பறை வசதிகள், முக ஒப்பனை கண்ணாடி அமைத்து அழகான ‘ரெஸ்ட் ரூம்’ அமைக்கவும் ஆலோசித்து வருகின்றனர். மற்றும் அம்மா மோட்டல்களை மகளிர் சுய உதவி குழுக்களிடம் ஒப்படைத்துச் செயல்படுத்துவது குறித்தும் விவாதித்து வருகிறது தமிழக அரசு. ‘அம்மா மோட்டல் அமைப்பது அரசு பரிசீனையில்தான் உள்ளது’ என்றும் ‘நெடுஞ்சாலைகளில் எத்தனை இடங்களில் மோட்டல்கள் அமைப்பது என்பதை குறித்து முதலமைச்சர் ஜெயலலிதா அறிவிப்பார்’ என்றும் உயர் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...