ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய ஆதார் அட்டை கட்டாயம்

கடந்த காங்கிரஸ் ஆட்சியில் ஆதார் அட்டை கொண்டு வரப்பட்டது. அப்போது அதை தீவிரமாக எதிர்த்தது பாஜக. ஆனால், தனிப்பெரும்பான்மையுடன் மோடி தலைமையில் பாஜக அரசு ஆட்சிக்கு வந்ததும் ஆதார் அட்டையை முந்தைய காங்கிரஸ் அரசைவிட
தீவிரமாக அமல்படுத்துகிறது. ஆதார் அட்டை கட்டாயம் இல்லை என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், சகல துறைகளிலும் ஆதார் அட்டை கட்டாயம் என்ற உத்தரவை பிறப்பிக்கிறது மத்திய அரசு. இப்போது ரயிலில் டிக்கெட் முன்பதிவு செய்யக்கூட ஆதார் கட்டாயம் என்ற முடிவை அறிவித்துள்ளது.

ரயிலில் நடைபெறும் குற்றங்களைத் தடுக்க என்ற காரணத்தோடு விரைவில் அறிமுகமாக இருக்கிறது ஆதார் அட்டை. ரயில் பயணங்களில் பெருகிவரும் ஆபத்துகள், அதாவது அடிக்கடி குண்டு வெடிப்பு, கடத்தல் போன்ற சம்பவங்கள் அரங்கேறும்போது, அது பற்றி விசாரிக்கும்போது பயணம் செய்தவர்கள் யார் என்ற தகவல் முழுமையாக கிடைப்பதில்லை. மேலும், உண்மையான விவரங்களும் கிடைப்பதில்லை. ரயிலில் டிக்கெட் முன்பதிவு செய்ய நடைமுறையில் இருக்கும் விதிமுறைகளால் ஒருவர் போலியான அடையாள அட்டையை காட்டிக்கூட, டிக்கெட் முன்பதிவு செய்து விட முடியும். அப்படியே அடையாள அட்டை இல்லையென்றாலும், அபராதமாக ரூ.50 கொடுத்து தப்பித்து விடுவதற்கு வாய்ப்பு உள்ளது. இதனால் சில நேரங்களில் ரயில்வே போலீஸார் திண்டாடுகின்றனர். இதை எல்லாம் மனதில் கொண்டுதான் மத்திய அரசு ஆதார் அட்டையை அறிமுகம் செய்யும் முடிவை எடுத்துள்ளது.

இந்திய குடிமக்களின் பெயர், முகவரி மட்டுமில்லாமல், கை ரேகை, கண்ரேகை போன்ற துல்லிய விவரங்களை கொடுக்கும் ஆதார் அட்டை இருந்தால் மட்டுமே ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யமுடியும் என்ற நிலை விரைவில் வர உள்ளது. மேலும், இது இல்லையென்றால் ரயில் டிக்கெட் கிடையாது என்ற நிலையும் வர வாய்ப்பு உள்ளது.

இந்த புதிய நடைமுறை அமல்படுத்தபட்ட பிறகு, ரயில் டிக்கெட்டில் பயணிகளின் ஆதார் எண் அச்சிடப்படும். பின்பு டிக்கெட் பரிசோதகர்களுக்கு வழங்கப்படும் நவீன இயந்திரத்தில் ஆதார் எண்ணை அழுத்தியவுடன் பயணிகளின் புகைப்படத்துடன் எல்லா விவரமும் தெரிந்துவிடும். இந்த புதிய முறையால் சட்டவிரோதமான நபர் ரயில் நிலையங்களில் நுழைவது மற்றும் ரயிலில் பயணிப்பது போன்றவை முற்றிலும் தவிர்க்க முடியும் என்று மத்திய அரசு நம்புகிறது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...