அரசுப்பள்ளியில் பயின்று மருத்துவபடிப்பில் ’சீட்’ கிடைத்தும் நிதியின்றி தவிக்கும் மாணவி !

அரசு மருத்துவ கல்லூரியில் இடம் கிடைத்தும், போதிய நிதி இல்லாமல், ஈரோட்டை சேர்ந்த ஏழை மாணவி தவித்து வருகிறார்.

ஈரோட்டை அடுத்த கெட்டி செவியூரை சேர்ந்த ஆறுமுத்து மகள் சங்கீதா. அரசு மேல்நிலை பள்ளியில், பிளஸ் 2 படித்த இவர், 1,170 மதிப்பெண் பெற்றார்
. அரசுப்பள்ளி அளவில் மாவட்டத்தில் மூன்றாமிடம் பிடித்தார்.

மருத்துவ கட்-ஆஃப், 197 மதிப்பெண் பெற்றார். சென்னையில் மருத்துவ கவுன்சிலிங்கிலும் பங்கேற்றார். இதில் கோவை இ.எஸ்.ஐ., மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில், பொது பிரிவில் எம்.பி.பி.எஸ்., சீட் கிடைத்தது. கல்லுாரியில் சேர, 13 ஆயிரத்து, 600 ரூபாய் கட்ட அறிவுறுத்தப்பட்டது.

தந்தை ஆறுமுத்து, சந்தை தோறும் சென்று, ஆடு விற்று வருகிறார். அவரிடம் பண வசதி இல்லை. மாணவியின் ஏழ்மை நிலை அறிந்து பள்ளி ஆசிரியர்கள், லயன்ஸ் சங்க உறுப்பினர்கள் நிதி அளித்தனர். ஆனாலும் அந்த தொகை போதவில்லை. போதிய நிதி இல்லாததால், கல்லுாரியில் சேர முடியாமல் தவித்து வருகிறார். உதவி செய்தால், மருத்துவ படிப்பை தொடர முடியும் என்று, சங்கீதா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இவர் சகோதரர் மகேஷ்குமார், தற்போது கோவை மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில், இரண்டாமாண்டு எம்.பி.பி.எஸ்., படித்து வருகிறார். இவருக்கு தமிழக காங்., முன்னாள் தலைவர் இளங்கோவன் மூலம், ஈரோட்டை சேர்ந்த ஒருவர் நிதியுதவி செய்தது குறிப்பிடத்தக்கது. இதேபோல் சங்கீதாவும், நிதி கிடைக்குமா என்று, எதிர்பார்த்துள்ளார். உதவும் உள்ளம் படைத்தோர், ௯௯௬௫௦-௩௧௦௩௮ என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...