அரசு பள்ளிகளைக் காக்க, இளைஞர்கள் போராட வேண்டும், என, மா.கம்யூ., கட்சியின் மாநில செயலாளர் ராமகிருஷ்ணன் பேசினார்.
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சிறப்பு மாநில மாநாடு, தர்மபுரி
மாவட்டம், பென்னாகரத்தில் நேற்று துவங்கியது. மாநில தலைவர் செந்தில் தலைமை வகித்தார். மாநாட்டை மா.கம்யூ., கட்சியின் மாநில செயலாளர் ராமகிருஷ்ணன் துவக்கி வைத்து பேசியதாவது:
இளைஞர்கள் ஒன்று திரண்டு சமூக மாற்றம் ஏற்படுத்த வேண்டும். காங்.,- பா.ஜ., அரசுகள் கடைபிடிக்கும் நவீன தாராளமய பொருளாதார கொள்கைகளை எதிர்க்க, இளைஞர்களை திரட்ட வேண்டும். அனைத்து தரப்பு விவசாயிகளின் வேளாண் கடன்களையும், தமிழக அரசு ரத்து செய்தால் தான், விவசாயத்தை காக்க முடியும். நெல்லுக்கு குவிண்டாலுக்கு, 2, 500 ரூபாய் வழங்க வேண்டும் என்ற சாமிநாதன் பரிந்துரையை அமல்படுத்த வேண்டும்.
அரசுப் பள்ளிகளை மூடும் நிலையை ஏற்படுத்தும். அரசு பள்ளிகளை பாதுகாக்க இளைஞர்கள் போராட்டம் நடத்தவேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.