துபாயில் பள்ளி மாணவர்களுக்கு உதவும் இணையதளம் !

துபாயில் உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு உதவும் வகையிலான இணையதளம் அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது. துபாயில் எக்செலன்சியா கல்வி நிறுவனம், 9ம் வகுப்புக்கு மேல் படித்து வரும் மாணவர்களின் வசதிக்காக வீட்டில் இருந்தபடியே பாட வகுப்புகளை படித்து புரிந்து கொள்ளும் வகையில் பாடங்களை
வடிவமைத்துள்ளது. இந்த பாடங்கள் ஆசிரியர்கள் நேரடியாக நமது முன்னால் இருந்து பாடம் நடத்துவது போன்று இருக்கிறது. இதனால் எந்த பாடங்கள் குறித்த சந்தேகங்கள் இருந்தாலும் அந்த பாடங்களை மாணவர்களை மீண்டும் மீண்டும் கேட்க முடியும். மேலும் மாணவர்கள் இணையம் மூலம் ஆசிரியர்களிடம் சந்தேகங்களை கேட்டு நிவர்த்தி செய்து கொள்ளவும் வசதி உள்ளது. இந்த இணையதளத்தில் மாணவர்கள் இலவசமாக பதிவு செய்து கொள்ளலாம். இந்த இணையத்தள முகவரி : http://www.roboestore.comஇந்த இணையதளம் மூலம் பொறியியல், மருத்துவம், ஐஐடி உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளுக்கும், மேலும் உயர்கல்வி படிக்கவும் உதவியாக இருந்து வருகிறது. இத்தகவலை எம்.டி. எஜுகேர் நிறுவனத்தின் இயக்குநர் டாக்டர் சயா சாஸ்திரி தெரிவித்தார். 

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...