கஞ்சா சாக்லேட்' விபரீதம்: கோட்டையில் அவசர ஆலோசனை

ஐந்து நாட்களாக டாக்டர்கள் போராடியும், சிகிச்சையில் முன்னேற்றம் இல்லை; அவனது உயிரைக் காப்பாற்ற டாக்டர்கள் போராடி வருகின்றனர். முதல்வர் தொகுதியான, ஆர்.கே.நகர் தொகுதியில் சம்பவம் நடந்தும், அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுக்காமல், 'இது எங்கள் துறையின் கீழ் வராது; இந்திய மருத்துவம் மற்றும்
ஓமியோபதி மருத்துவ கட்டுப்பாட்டு அமைப்பு தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, கைவிரித்தனர்.
இது குறித்து, நமது நாளிதழில், 'பிஞ்சுகளை வீழ்த்தும் கஞ்சா சாக்லெட்; கவலைக்கிடமான நிலையில் மாணவன்; முதல்வர் தொகுதியில் அரங்கேறிய அதிர்ச்சி' என்ற தலைப்பில், விரிவான செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில், அவசர ஆலோசனை, தலைமைச் செயலகத்தில் நேற்று நடந்துள்ளது.

கடுமையான எச்சரிக்கை

உணவு பாதுகாப்புத்துறை, மருந்து கட்டுப்பாட்டுத்துறை, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை இயக்கக அதிகாரிகளும், இதில் பங்கேற்றனர். இரண்டு மணி நேரத்திற்கும் மேல் நீடித்த ஆலோசனையின் போது, இந்த விவகாரத்தில் அலட்சியமாகச் செயல்பட்டுள்ளதாக, உணவு பாதுகாப்பு, மருந்து கட்டுப்பாட்டுத்துறை அதிகாரிகளை, அமைச்சர்
கடுமையாக எச்சரித்துள்ளார்.'ஆயுர்வேதம் சார்ந்தது என்றாலும், மருந்துக் கடைகளில் தான், இந்திய மருந்துவ அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பர். பெட்டிக் கடைகளில், போதை சாக்லேட் விற்பனையை நீங்கள் தானே நடவடிக்கை எடுக்க வேண்டும்; முடியாவிட்டால், இந்திய மருத்துவ அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்காதது ஏன்; முதல்வர் தொகுதியில் நடந்த சம்பவத்திலேயே அலட்சியம் காட்டினால், மற்ற இடங்களில் எப்படி வேலை செய்வீர்கள்' என, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளை, அமைச்சர் வறுத்தெடுத்துள்ளார்.

அமைச்சர் 'விசிட்'

இந்த ஆலோசனை கூட்டத்துக்கு முன், நேற்று காலை, 7:00 மணிக்கு, சிறுவன் பரத்தை, அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் துறை செயலர் ராதாகிருஷ்ணன் நேரில் சென்று பார்வையிட்டனர். சிகிச்சை முறைகள் குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்ததோடு, சிறுவனை காப்பாற்ற அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளுமாறு அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.சற்று முன்னேற்றம்அதன் பின், சிகிச்சை இன்னும் தீவிரமடைந்தது. கடந்த ஐந்து நாட்களாக, சிகிச்சையில் எந்த முன்னேற்றமும்
இல்லாதிருந்த நிலையில், நேற்று மாலையில் சிறுவன் லேசாக கண் விழித்துள்ளான்; கை, கால்களில், சிறிது அசைவு ஏற்பட்டுள்ளது. உடல் நிலையில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால், படிப்படியாக அவனுக்குநினைவு திரும்ப வாய்ப்புள்ளது என்று டாக்டர்கள் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.

மாநிலம் முழுவதும் ஆய்வு!

சென்னை மட்டுமின்றி, தமிழகம் முழுவதும் இதுபோன்று கஞ்சா சாக்லேட், மூலிகை சாக்லேட் என்று, பல்வேறு பெயர்களில் விற்பனை செய்யப்படலாம் என்பதால், மாநிலம் முழுவதும், தீவிரமாக கண்காணிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. பள்ளிகள் தோறும் தலைமை ஆசிரியர்கள் இதுகுறித்து மாணவர்களிடம் பேசவும், அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பள்ளியின் அருகே, தரமற்ற சாக்லேட், போதை சாக்லேட், சந்தேகப்படும்படியான பொருட்கள் விற்பனை நடந்தால், அது பற்றி தங்களுக்கு தகவல் கொடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாவட்ட, இந்திய மருத்துவ முறை, மருந்து கட்டுப்பாட்டு அலுவலர்களுக்கு தரப்பட்டுள்ள இந்த உத்தரவைத் தொடர்ந்து, இன்று முதல், தமிழகம் முழுவதும் ஆய்வுகள் துவங்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

'தரங்' எப்படி 'பாங்க்' ஆனது?

சாக்லேட் பாக்கெட்டில், 'தரங்' ஆயுர்வேத மருந்து என, குறிப்பிடப்பட்டுள்ளது. இவை, உலர் திராட்சை, திரிபலா, மிளகு, வெல்லம் சேர்த்து தயாரிக்கப்பட்டது எனவும், மற்றொரு பாக்கெட்டில், இந்துப்பு, கறுப்பு உப்பு, பேரீச்சை, சர்க்கரை கலந்து தயாரிக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டு உள்ளது. இவ்வாறு, பாக்கெட் கவர்களில் குறிப்பிட்டு விட்டு, போதை கலந்த சாக்லேட் விற்பனைக்கு அனுப்பி உள்ளதும், இளைஞர்களை குறி வைத்து இவை விற்கப்பட்டுள்ளதும், முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதை இளைஞர்களும், விற்பனையாளர்களும், 'பாங்கு' என கூறுகின்றனர்.

போதை அளவு எவ்வளவு: தாவரவியல் ரீதியில் சோதனை

அரசு உத்தரவை அடுத்து, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை சார்ந்த, மருந்து கட்டுப்பாட்டுத் துறையின், மூன்று தனிப்படைகள், களத்தில் குதித்துள்ளன. தண்டையார்பேட்டை பகுதியில் விற்பனையான, 'கஞ்சா சாக்லெட்' மாதிரிகள் எடுத்து, பரிசோதனைக்கு அனுப்பினர். இந்த மாதிரியில், தாவரவியல் ரீதியான சோதனைகள் நடந்து வருகின்றன.
இதில் கலந்துள்ளபோதைப் பொருள் என்ன; எந்த அளவு போதை கலந்துள்ளது என தெரிந்த பின், சம்பந்தப்பட்ட நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இந்த சாக்லேட், உத்தர பிரதேசம், இந்துாரில் இருந்து
வந்துள்ளது. இதில் உள்ள உரிமம் எண் விவரங்கள் குறித்தும் ஆய்வு நடக்கிறது. தமிழகத்தில் விற்பனைக்கு வந்துள்ளதால், 'லேபிள்' சட்ட விதிகளின் படி நடவடிக்கை எடுக்கவும், ஆலோசனை நடந்து வருகிறது. போதையின் தாக்கம் தெரியாதாம்!

கஞ்சா சாக்லேட்டை விற்ற நேதாஜி நகரைச் சேர்ந்த தேவ் பகதுார், 36, பாதிக்கப்பட்ட மாணவனின் பாட்டி கொடுத்த புகாரின் பேரில், வழக்கு பதிவு செய்யப்பட்டு, போலீசாரால் கைது செய்யப்பட்டு உள்ளார். இவர், பீஹாரை பூர்வீகமாகக் கொண்டவர். போலீசாரிடம், அவர் கொடுத்துள்ள வாக்குமூலம்:
பெரியவர்களுக்கு பசியை துாண்டும் என்பதால், கஞ்சா கலந்த சாக்லேட்டை அதிகம் விரும்பிச் சாப்பிடுவர். இதனால், கடையில் அந்த சாக்லேட்டின் விற்பனை அதிகரித்தது. குழந்தைகள் கேட்டாலும், இல்லையென்று சொல்வதில்லை. விற்பனை அதிகரித்ததால், பீஹாரில் இருந்து இறக்குமதி செய்து விற்பனை செய்தேன். ஆனால், போதையின் தாக்கம் இவ்வளவு பெரிய பாதிப்பை ஏற்படுத்துமென நினைக்கவில்லை. வட மாநிலங்களில், கஞ்சா சாக்லேட் மிகவும் பிரபலம். அதை, 'பாங்கு' என்று குறிப்பிடுவர். ஒவ்வொரு பண்டிகையின் போது, பாங்கை பானமாகவும் குடிப்பர். இவ்வாறு அவர் கூறியுள்ளதாக தெரிகிறது.

உயிரிழப்பு ஏற்படும்!

கஞ்சா கலந்த சாக்லேட் சாப்பிட்ட குழந்தைகளுக்கு, நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டு, மிதப்பது போன்ற உணர்வு ஏற்படுத்தும். இதனால், குழந்தைகள் திரும்ப திரும்ப வாங்கிச் சாப்பிடும் அளவிற்கு அடிமை ஆவதோடு, மனதளவிலும் பாதிக்கப்படுவர். தொடர்ந்து இந்த சாக்லேட்களைச் சாப்பிடும் குழந்தைகளுக்கு மூச்சுத் திணறல் ஏற்படுவதுடன், உயிருக்கும் ஆபத்து ஏற்படும்.
குழந்தைகளின் செயல்பாடுகளை, பெற்றோர் கவனிக்க வேண்டும். படிப்பில் ஆர்வமின்றி இருப்போர், தனிமையை விரும்புவோர், பெற்றோர், நண்பர்களுடன் விலகி இருக்கும் குழந்தைகளை கண்காணிக்க வேண்டும். குழந்தைகள் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டால், நரம்பியல் மற்றும் மனநல மருத்துவரை உடனடியாக அணுக வேண்டும்.
ஜெ.குமுதாகுழந்தைகள் நல மருத்துவர், சென்னை'கடைக்காரர் மீதுநடவடிக்கை!'
உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் பொருட்களை விற்பனை செய்வது தவறு. கஞ்சா கலந்த சாக்லேட் விற்பனை செய்யும் கடைகள், உடனடியாக கண்டறியப்பட்டு அகற்றப்படும். விற்பனை செய்யும் கடைக்காரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த சாக்லேட் எங்கு தயாரிக்கப்படுகிறது, எங்கு பதுக்கி வைக்கப்படுகிறது, எப்படி விற்பனைக்கு
வருகிறது போன்ற விவரங்களைச் சேகரித்து, விற்பனையை தவிர்க்க பேரவையின் சார்பில் உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும்.த.வெள்ளையன், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் - 

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...