இந்தாண்டு அரசு மருத்துவக் கல்லூரியில் சேர... கடும்போட்டி பல்வேறு பிரிவுகளில் கட் ஆப் மதிப்பெண் உயர்வு

அரசு மருத்துவக் கல்லுாரியில் சேர, இந்தாண்டு பல்வேறு பிரிவு மாணவர்கள் இடையே கடும் போட்டி இருந்தது கட் ஆப் மதிப்பெண் அதிகரித்துள்ளதன் மூலம் தெரியவந்துள்ளது.

புதுச்சேரி அரசு மருத்துவக் கல்லுாரியில் 127 எம்.பி.பி.எஸ்., இடங்கள், ஏழு
தனியார் மருத்துவ கல்லுாரிகளில் 283 இடங்கள் என, இந்தாண்டு மொத்தம் 410 எம்.பி.பி.எஸ்., இடங்கள் அரசு ஒதுக்கீடாக பெறப்பட்டன.

இந்த இடங்களுக்கு சென்டாக் மூலம் கவுன்சிலிங் நடத்தி சேர்க்கை ஆணை வழங்கப்பட்டது. அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு அரசு மருத்துவ கல்லுாரியில் சீட் கிடைத்தது. மற்றவர்களுக்கு தனியார் கல்லுாரிகளில் சீட் ஒதுக்கப்பட்டது.

தனியார் கல்லுாரியில் இடம் கிடைத்த மாணவர்கள், இன்று 5ம் தேதி மாலை 5.00 மணிக்குள் அந்தந்த கல்லுாரியில் சேர வேண்டும்.

இல்லையெனில், அடுத்தடுத்த மருத்துவக் கவுன்சிலிங்கில் பங்கேற்க முடியாது என, எச்சரிக்கப்பட்டுள்ளது.

அரசு மருத்துவ கல்லுாரியில் இடம் கிடைத்த அனைத்து மாணவர்களும் சேர்ந்துள்ள சூழ்நிலையில், அக்கல்லுாரியில் கட் ஆப் மதிப்பெண் முழு விபரம் தெரியவந்துள்ளது.கட் ஆப் மதிப்பெண்ணை ஒப்பிட்டு பார்க்கும் போது, எப்போதும் இல்லாத அளவிற்கு இந்தாண்டு புதுச்சேரி பொதுப்பிரிவு, ஓ.பி.சி., மாகி, ஏனாம் பொதுப் பிரிவு இடையே அதிக போட்டி ஏற்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

புதுச்சேரி பிராந்தியம்

இந்தாண்டு மொத்தம் 95 எம்.பி.பி.எஸ்., சீட்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. பொது பிரிவினருக்கு கடந்தாண்டு கட் ஆப் மதிப்பெண் 191.666, ஓ.பி.சி.,பிரிவுக்கு 191.66 ஆக இருந்தது.

இந்தாண்டு பொது பிரிவு மாணவர்கள் அதிக மதிப்பெண் எடுத்தால் கட் ஆப் மதிப்பெண் அவர்களுக்கு 2 சதவீதமும், ஓ.பி.சி.,க்கு 1.6 சதவீதம் அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் மீனவர் தவிர்த்த மற்ற பிரிவினருக்கு கடும் போட்டி நிலவவில்லை.

காரைக்கால் பிராந்தியம்:

பொதுப் பிரிவில் கடந்தாண்டு போலவே இந்தாண்டு போட்டி இல்லை.

அதே வேளையில் காரைக்கால் எஸ்.சி., பிரிவில் கடும் போட்டி இருந்துள்ளது. கடந்தாண்டு எஸ்.சி.,பிரிவில் 159.666 கட் ஆப் மதிப்பெண் எடுத்தவருக்கு அரசு மருத்துவ கல்லுாரியில் எம்.பி.பி.எஸ்.,சீட் கடைசியாக கிடைத்திருக்க இந்தாண்டு, 177.667 கட் ஆப் மதிப்பெண் எடுத்தவர்களுக்கே சீட் கிடைத்தது. கிட்டத்தட்ட 18 சதவீதம் கட் ஆப் மதிப்பெண் அதிகரித்துள்ளது.

மாகி பிராந்தியம்

எம்.பி.பி.எஸ்., தரவரிசை பட்டியலில் இந்தாண்டு 70 மாகி மாணவர்கள் இடம் பெற்றிருந்தாலும் பொதுபிரிவில் கடும் போட்டி இருந்தது. கடந்தாண்டு 193.333 கட் ஆப் மதிப்பெண் எடுத்தவருக்கு கடைசியாக எம்.பி.பி.எஸ்.,சீட் கிடைத்தது. இந்தாண்டு 197.667 கட் ஆப் மதிப்பெண் தான் கடைசி மாணவரின் தகுதி மதிப்பெண்ணாகும்.

ஏனாம்

ஏனாமியில் இந்தாண்டு பொதுப் பிரிவு 198.222, எம்.பி.சி.,-195.111, எஸ்.சி.,174.666 ஆக கட் ஆப் மதிப்பெண் உயர்ந்துள்ளது.அரசு மருத்துவக் கல்லுாரியில் ஆண்டுதோறும் கட் ஆப் மதிப்பெண் அதிகரித்து வருகிறது. ஒரு சில தசம புள்ளி மதிப்பெண்கள் வித்தியாசத்தில் கூட மாணவர்களின் எம்.பி.பி.எஸ்., வாய்ப்புகள் பறிபோய்விடுவதை இவை வெளிப்படுத்துகின்றன.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...