செவ்வாயில் ஸ்ட்ரக் ஆகி நிற்கும் க்யூரியாசிட்டி!

செவ்வாயில் தரையிறங்கி ஆய்வுப்பணி செய்துவரும் க்யூரியாசிட்டி தானியங்கி ரோபாட், கடந்த ஜூலை 4ஆம் தேதி திடீரென முன்னெச்சரிக்கை உறைவுநிலைக்குச் சென்றுவிட்டது. ஆனால் ரோபாட் நிலையாக இருப்பதாகவும், அதைக்
கையாளுபவர்களுடன் தொடர்பில் இருப்பதாகவும் நாசாவின் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது. ஜூலை 2ஆம் தேதி அன்று குறைந்தபட்ச செயல்பாட்டு நிலைக்கு தன்னைக் கொண்டுசென்ற க்யூரியாசிட்டி பின்னர் 4ஆம் தேதி உறைவுநிலைக்குச் சென்றுள்ளது. இது, எதனால் ஏற்பட்டது என பொறியாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.

"கேமரா மென்பொருளுக்கும் தகவல் செயல்முறை மென்பொருளுக்கும் தொடர்பற்று உள்ளதால், இந்த நிலைக்கு சென்றிருக்கக்கூடும் என ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிப்பதாக" நாசாவின் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. "தொடர்ந்து விலகாமல் கண்காணித்து அதை உறை நிலையிலிருந்து மீட்கும் நடவடிக்கை நடந்துவருகிறது" எனவும், "இதற்கு முன்னரும் இதேபோன்று உறைவுநிலைக்குச் சென்றுவிட்ட க்யூரியாசிட்டியை சில நாட்களிலேயே இலகுவாக மீட்டுள்ளோம்" என அதையும் சுட்டிக்காட்டியுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...