ஆசிரியை மீது சாதித் துவேஷம் காட்டிய தலைமை ஆசிரியர்!

சாதியைக் காரணம் காட்டி ஆசிரியரை பாடம் எடுக்காமல் தடுத்த அவலம்

“சாதிகள் இல்லையடி பாப்பா!” என்று பாடம் சொல்லி கொடுக்கும் ஆசிரியரையே சாதியைக் காரணம் காட்டி, பள்ளி நிர்வாகம் புறக்கணித்த விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. தர்மபுரி நகராட்சிக்கு
உட்பட்ட சந்தைப்பேட்டை எனும் பகுதியில் நகராட்சி நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் தலைமையாசிரியர் உட்பட ஐந்து ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ரோஜா என்ற ஆசிரியை, கடந்த மூன்று ஆண்டுகளாக இப்பள்ளியில் பணிபுரிந்து வருகிறார். இவர் ஒன்றாம் வகுப்பு முதல் நான்காம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்குப் பாடம் சொல்லிக்கொடுத்து வருகிறார்.

இந்நிலையில், ஆசிரியை ரோஜாவின் சாதியைக் காரணம் காட்டி, அவரது வகுப்புக்கு மாணவர்களை அனுப்பாமல் அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் தொடர்ந்து புறக்கணித்து வந்ததாகக் கூறப்படுகிறது. நேற்றும் ஆசிரியை ரோஜாவின் வகுப்பறைக்கு ‘மாணவ - மாணவியர் செல்ல வேண்டாம்!’ என தலைமை ஆசிரியர் தெரிவித்ததாக புகார் எழுந்தது. இதனால், அதிருப்தி அடைந்த ஆசிரியை ரோஜா, மாணவர்கள் இல்லாத வகுப்பறையில் தனியாக அமர்ந்து நீதி வேண்டி போராட்டத்தில் ஈடுபட்டார். இதுகுறித்து தகவலறிந்த பள்ளி கல்வித்துறை அதிகாரிகள், இப்பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...