தொடக்கக்கல்வி பட்டய தேர்வு துவக்கம்!

உடுமலை, பொள்ளாச்சியில் 115 மாணவர்கள் தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வு எழுதினர்; 11 மாணவர்கள் ஆப்சென்ட் ஆகினர்.

தொடக்கக் கல்வி பட்டயப் படிப்பு இரண்டாமாண்டு மாணவர்களுக்கான தேர்வுகள் நேற்று மாநிலம் முழுவதும் துவங்கியது. உடுமலையில், பாரதியார் நுாற்றாண்டு அரசு பெண்கள்
மேல்நிலைப்பள்ளியிலும், பொள்ளாச்சியில் எஸ்.ஆர்.ஐ., நகராட்சி மேல்நிலைபள்ளிகளும் தேர்வு மையங்களாக உள்ளன.

இதில் நேற்று உடுமலையில், 70 மாணவர்கள் தேர்வு எழுதினர்; 2 பேர் ஆப்சென்ட் ஆகினர். பொள்ளாச்சியில் 45 மாணவர்கள் தேர்வு எழுதினர்; 9 பேர் ஆப்சென்ட் ஆகினர். தேர்வுகள் காலை, 10:00 மணிக்கு துவங்கி, 1:00 மணி வரை நடந்தது. பாரதியார் நுாற்றாண்டு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், தலைமையாசிரியர் விஜயலட்சுமி தேர்வுகளை கண்காணித்தார்.

திருமூர்த்திநகர் மாவட்ட கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் திருஞானசம்பந்தன், தேர்வுகளை பார்வையிட்டார். முதலாமாண்டு மாணவர்களுக்கான தேர்வுகள் இன்று துவங்குகிறது. உடுமலையில், 48 பேர் மற்றும் பொள்ளாச்சியில், 148 பேர் தேர்வு எழுதுகின்றனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...