மருத்துவ உயர்கல்வியில் அனைவருக்கும் வாய்ப்பு: தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு

தமிழகத்தில், எம்.பி.பி.எஸ்., படித்தவர்கள் மட்டுமே உயர் சிறப்பு மருத்துவ படிப்புக்கு விண்ணப்பிக்க முடியும்' எனக் கட்டுப்படுத்த முடியாது. அனைவருக்கும் வாய்ப்பு அளிக்க வேண்டும்' என, சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது.


''வரும், 10ம் தேதி நடக்கவுள்ள நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் காலக்கெடுவை, 2ம் தேதியிலிருந்து மேலும் மூன்று நாட்களுக்கு நீட்டிக்க வேண்டும். இல்லாவிட்டால் நுழைவுத் தேர்வுக்கு தடை விதிக்கப்படும்,'' என, நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, சி.நாகப்பன் ஆகியோர் அடங்கிய சுப்ரீம் கோர்ட் அமர்வு கூறியுள்ளது.

இது தொடர்பாக, டாக்டர் சந்தீப் சதாசிவ ராவ் கன்சுர்கர் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் தொடர்ந்துள்ள வழக்கில் கூறியுள்ளதாவது:

தமிழகத்தில் உள்ள உயர் சிறப்பு மருத்துவ படிப்புகள் நுழைவுத் தேர்வை, தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., படித்தவர்கள் மட்டுமே எழுத முடியும் என்ற கட்டுப்பாடு உள்ளது.

உயர் கல்விக்கு, குறிப்பாக உயர் சிறப்பு மருத்துவ படிப்புகளுக்கு இடஒதுக்கீடு கிடையாது; அதுவும் புவியியல் அடிப்படையில் கட்டுப்பாடு விதிக்கப்படுவது,
தகுதியுள்ளவர்களின் வாய்ப்பை பறிப்பதாக அமைந்து விடுகிறது. இது அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது.
அதே நேரத்தில், மற்ற மாநிலங்களில் நடக்கும் நுழைவுத் தேர்வுகளில் இதுபோன்ற கட்டுப்பாடுகள் கிடையாது; அந்த நுழைவுத் தேர்வுகளில் தமிழகத்தைச் சேர்ந்தவர்களும் கலந்து கொள்கின்றனர். அதனால், தமிழகத்தில் உயர் சிறப்புமருத்துவ படிப்புக்கான நுழைவுத் தேர்வில் அனைத்து மாநிலத்தவருக்கும் அனுமதி அளிக்கும்படி உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

நேற்று இதை விசாரித்த நீதிபதிகள் உத்தரவில் கூறியதாவது:நிலப்பரப்பின் அடிப்படையில் கட்டுப்பாடுகள் விதிக்க முடியாது. வரும், 10ம் தேதி நடக்கவுள்ள நுழைவுத் தேர்வில் அனைத்து மாநில மக்களுக்கும் வாய்ப்பு அளிக்க வேண்டும். அதன்படி, விண்ணப்பிக்க கடைசி நாளான, 2ம் தேதி, மேலும் மூன்று நாட்களுக்கு நீட்டிக்க வேண்டும்.

இது தொடர்பாக, அனைவரும் தெரிந்து கொள் ளும் வகையில் விளம்பரப்படுத்த வேண்டும். நுழைவுத் தேர்வில், வெளி மாநிலத்தவருக்கு அனுமதி அளிக்காவிட்டால், நுழைவுத் தேர்வுக்கு தடை விதிக்கப்படும்.இவ்வாறு நீதிபதிகள் கண்டிப்புடன் கூறினர்.

தமிழகத்திற்கு பின்னடைவு:உயர் சிறப்பு மருத்துவ படிப்புகள் விவகாரத்தில், சுப்ரீம் கோர்ட் உத்தரவை ஏற்று, விண்ணப்பிக்கும் காலஅவகாசத்தை, தமிழக அரசு நீட்டிக்க உள்ளது.தமிழகத்தில், டி.எம்., - எம்.சி.எச்., என்ற, உயர் சிறப்பு மருத்துவ படிப்புகளுக்கு, 189 இடங்கள் உள்ளன. இதில், 50 சதவீத இடங்கள், அரசு டாக்டர்களுக்கும்; 50 சதவீத இடங்கள், தமிழகத்தில் உள்ள பிற டாக்டர்கள் விண்ணப்பிக்கும் நடைமுறை, தற்போது அமலில்
உள்ளது.

அரசு டாக்டர்கள் இடங்கள் தவிர, மீதமுள்ள, 50 சதவீத இடத்திற்கு, அகில இந்திய அளவில் டாக்டர்கள் விண்ணப்பிக்க வழி வகை செய்ய வேண்டும் என, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள் ளது. இதையடுத்து, இந்த நடைமுறையை தமிழக அரசு ஏற்கிறது.

இதுகுறித்து, சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: உயர் சிறப்பு மருத்துவ படிப்புகளுக்கு, 1999ம் ஆண்டு முதல், 50 சதவீத இடங்களுக்கு, அகில இந்திய அளவில் டாக்டர்கள் விண்ணப்பிக்கும் நிலை அனைத்து மாநிலங்களிலும் உள்ளது. தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில், அந்த மாநிலத்தவராக இருக்க வேண்டும் என்ற நிபந்தனை உள்ளது.

தற்போதைய சூழலில், சுப்ரீம் கோர்ட் உத்தரவை அமல்படுத்த வேண்டிய நிலையில் நாம் உள்ளோம். தீர்ப்பின் நகல் விவரங்கள் பெற்று, அரசிடம் ஆலோசிக்கப்படும். விண்ணப்பிக்க அவகாசம், இன்று முடிந்தாலும், சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி கால அவகாசம் தருவது குறித்த முறையான அறிவிப்பு இன்று வெளியிடப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...