செப்டம்பர் 2-ம் தேதி அகில இந்திய வேலைநிறுத்தத்தை முன்னிட்டு 3 மணிநேரம் தர்னா போராட்டம் நடத்த புதுச்சேரி அரசு ஊழியர் சங்கங்களின் சம்மேளனம் முடிவு செய்துள்ளது.
அதன் பொதுச் செயலர் எம்.பிரேமதாசன் வெளியிட்ட அறிக்கை:
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தாமல் இருப்பது, தொழிலாளர்
நலச்சட்டங்களை திருத்துவது, ரயில்வே, பாதுகாப்பு போன்ற துறைகளில் அன்னிய முதலீட்டுக்கு ஒப்புதல், பொதுத்துறை நிறுவனங்களை தாரைவார்ப்பது, போன்ற மத்திய அரசின் செயல்பாடுகளைக் கண்டித்து அகில இந்திய அளவில் வேலைநிறுத்தம் நடத்த தொழிற்சங்க கூட்டமைப்புகள், மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனம் அழைப்பு விடுத்துள்ளன.

புதுவையிலும் வேலைநிறுத்தத்தை வெற்றிகரமாக நடத்த சம்மேளன பொதுப்பேரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. இதன்படி 2-ம் தேதி புதுவை தலைமை தபால் நிலையம் அருகே காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை தர்னா போராட்டம் நடத்தப்படும்.
எனவே அனைத்துப்பிரிவு அரசு, உள்ளாட்சி, தன்னாட்சி, கூட்டுறவு, தனியார் பள்ளி ஊழியர்கள் தர்னா போராட்டத்தில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.