ஐந்து ரூபாய்க்கு ஆசைப்பட்டு இதுவரை 5 லட்சம் ரூபாய் செலவழித்துள்ளார். மேலும் 41 ஆண்டுகளாக நீதிமன்றத்துக்கு நடந்து கொண்டிருக்கிறார்.
ரன்வீர்சிங் யாதவ் டெல்லி அரசு போக்குவரத்து கழகத்தில் நடத்துனராக பணியாற்றி வருகிறார். 1973 ஆம்
ஆண்டு தனது கடமையை ஆற்றி கொண்டிருந்தார். பெண் பயணி ஒருவர் தான் செல்ல வேண்டிய இடத்திற்கு ரூ.15 கொடுத்து பயணச்சீட்டு வாங்கியுள்ளார். ஆனால் டிக்கெட்டின் விலை 10 ரூபாய்தான். மீதி 5 ரூபாய் பயணியிடம் கொடுக்காமல் அவரே வைத்துக்கொண்டதாகச் சொல்லப்படுகிறது.. அப்போது, திடீரென டிக்கெட் பரிசோதர்கள் பேருந்தில் ஏறி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது நடத்துனரின் செயல் தெரியவந்தது. தீவிர விசாரணைக்குப் பின் குற்றம் நிரூபிக்கபட்டதையடுத்து அவர் பணியிடைநீக்கம் செய்யபட்டார்.
அப்பபணியிடை நீக்கத்தை எதிர்த்து ரன்வீர்சிங் தொழிலாளர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். 1990ல் அந்த வழக்கில் தீர்ப்பு அவருக்கு சாதகமாக வந்தது. இதனை எதிர்த்து டெல்லி அரசு போக்குவரத்து கழகம், உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த இடைபட்ட காலத்தில் ரன்வீர்சிங்க்கு அரசு போக்குவரத்து கழகம் வழங்க வேண்டிய 6 லட்சம் பணிக்கொடையும், மற்ற பயன்பாடுகளையும் வழங்குமாறு நீதிமன்றம் கூறியது. ஆனால் இறுதி தீர்ப்பு மட்டும் வழங்காமல் வழக்கு நீடித்து கொண்டே இருந்தது.