மின்வாரிய எழுத்து தேர்வு : 50 ஆயிரம் பேர் பங்கேற்பு !

மின்வாரிய எழுத்து தேர்வில், 50 ஆயிரம் பேர் பங்கேற்றதாக, அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழ்நாடு மின்வாரியத்தில், அதிகளவில் காலி பணியிடங்கள் உள்ளன. இதனால், ஒருவரே, பல வேலைகளை செய்ய வேண்டியுள்ளதால், குறித்த காலத்தில் பணிகள் முடிவதில்லை. இதையடுத்து,
உதவியாளர், கணக்கீட்டாளர் உள்ளிட்ட, 1,900 காலி பணியிடங்களை நிரப்ப, மின்வாரியம் முடிவு செய்தது. அதில், கள உதவியாளர், -900; ரசாயன சோதகர், 100; சுருக்கெழுத்தர், 25; இளநிலை கணக்கீட்டாளர், 250 பதவிகளுக்கு ஆட்களை தேர்வு செய்வதற்கான எழுத்து தேர்வை, மின்வாரியம் நேற்று நடத்தியது. இளநிலை உதவியாளர் நிர்வாகம், 100; தொழில்நுட்ப உதவியாளர் எலக்ட்ரிகல், 500; தொழில்நுட்ப உதவியாளர் மெக்கானிக்கல், 25 பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு, இன்று நடக்கிறது.



இதுகுறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது: அண்ணா பல்கலை மூலம், சென்னை, கோவை, வேலுார், விழுப்புரம், ஈரோடு, திருச்சி, மதுரை, நெல்லை என, எட்டு மண்டலங்களில் உள்ள தேர்வு மையங்களில், எழுத்து தேர்வு நடத்தப்பட்டது; 50 ஆயிரம் பேர் தேர்வு எழுதி இருப்பதாக, பல்கலை அதிகாரிகள் தெரிவித்தனர். நாளை நடக்கும் தேர்விலும், அதே எண்ணிக்கையில் பங்கேற்பர் என, தெரிகிறது; தேர்வு முடிவு, ஒரு மாதத்தில் வெளியிடப்படும்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...