ரிலையன்ஸ் ஜியோ இலவச சலுகை !

தங்களது மொபைல் போன் வாடிக்கையாளர்களுக்கு, மூன்று மாத இலவச அழைப்பு மற்றும், '4ஜி' இலவச இன்டர்நெட் சேவை வழங்கியுள்ள, 'ரிலையன்ஸ் - ஜியோ' நிறுவனம், தற்போது, வேறு சில நிறுவனங்களின் மொபைல் போன்களை வாங்குவோருக்கும், அச்சலுகையை
விரிவுபடுத்தி உள்ளது. இதுகுறித்து, அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை: ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அறிமுகம் செய்துள்ள, 'லைப் மொபைல் போன்' மற்றும், 'சாம்சங், எல்.ஜி., பேனாசோனிக், அசுஸ்' ஆகிய நிறுவனங்களின் மொபைல் போன்களை வாங்கு வோருக்கும், 'ஜியோ 4ஜி' சிம் கார்டுகளை, இலவசமாக வழங்கி வருகிறது. அதன்மூலம், மூன்று மாதங்களுக்கு, அனைத்து தொலைபேசி மற்றும் மொபைல் போன்களுக்கும், இலவச அழைப்பு வசதியும், இலவச இன்டர்நெட்டும் தரப்படுகிறது. தற்போது, 'அல்காடெல், டி.சி.எல்., மைக்ரோமேக்ஸ்' ஆகிய மற்ற நிறுவனங்களின், '4ஜி' மொபைல் போன்களை வாங்குவோருக்கும்,

அச்சலுகை விரிவுபடுத்தப்பட்டு உள்ளது. அவர்கள், 'ரிலையன்ஸ் டிஜிட்டல்' கடைகளுக்கு சென்று, உரிய ஆவணங்களை தந்து, 'சிம்' பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...