ரூ.55 கோடி ஊதியம் பாக்கி தேர்தல் பணி ஊழியர்கள் விரக்தி !

தமிழக சட்டசபை தேர்தலில், தேர்தல் பணியாற்றிய அரசு ஊழியர்களுக்கு, 54 கோடியே, 75 லட்சத்து, 60 ஆயிரம் ரூபாய் ஊதியம், இன்னமும் வழங்கப்படவில்லை. அதை உடனே வழங்க வேண்டும் என, ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தமிழகத்தில், மே மாதம் நடந்த சட்டசபை தேர்தலுக்காக, மார்ச் முதல், வருவாய் துறையினர் உட்பட, பல்வேறு அரசு துறை ஊழியர்கள், தேர்தல் பணியாற்றினர். தேர்தல் முடிந்ததும், தேர்தல் பணியில் ஈடுபட்ட, கல்வித் துறையினருக்கு மட்டும், அதற்கான ஊதியம் உடனடியாக வழங்கப்பட்டது.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதல், தேர்தல் விதிமுறை முடியும் நாள் வரை, பணியாற்றிய வருவாய் உட்பட பிற துறை அலுவலர்களுக்கு, தேர்தல் பணிக்கான ஊதியம் வழங்கப்பட வில்லை.

தமிழகம் முழுவதும், 70 ஆயிரத்து 200 பேருக்கு, 54 கோடியே, 75 லட்சத்து, 60 ஆயிரம் ரூபாய், ஊதியம் வழங்க வேண்டி உள்ளது. தேர்தல் முடிந்து, மூன்று மாதங்களுக்கு மேல் ஆகிவிட்ட நிலையில், விரைவில் ஊதியம் வழங்க வேண்டும் என, சம்பந்தப்பட்ட ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தேர்தல் பணியில் ஈடுபட்ட ஊழியர்களுக்கு, உரிய ஊதியத்தை வழங்க, கடந்த வாரம் இரண்டு அரசாணைகள் பிறப்பிக்கப்பட்டன. அதில், 54 கோடி ரூபாய் வழங்க, அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. ஓரிரு நாளில், தேர்தல் பணியாற்றிய ஊழியர்கள் அனைவருக்கும், மாவட்ட நிர்வாகம் மூலம், ஊதியம் வழங்கப்பட்டு விடும்.

ராஜேஷ் லக்கானி

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...